விக்டோரியா ஒகாம்போ
விக்டோரியா ஒகாம்போ Victoria Ocampo | |
---|---|
பிறப்பு | Ramona Victoria Epifanía Rufina Ocampo Aguirre 7 ஏப்பிரல் 1890 புவெனஸ் ஐரிஸ் |
இறப்பு | 27 சனவரி 1979 (அகவை 88) புவெனஸ் ஐரிஸ் |
படித்த இடங்கள் |
|
பணி | எழுத்தாளர், public figure |
விருதுகள் | Commander of the Order of the British Empire, Commandeur des Arts et des Lettres |
விக்டோரியா ஒகாம்போ(ஆங்கிலம்:Victoria Ocampo CBE)(ஏப்பிரல் 7 1890-சனவரி 27, 1979) ஆர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இலக்கியவாதியும் எழுத்தாளருமாக விளங்கிய பெண்மணி ஆவார்.
பிறப்பும் படிப்பும்
[தொகு]விக்டோரியா ஒகாம்போ வசதியான உயர் குடும்பத்தில் பிறந்தார். வீட்டிலேயே ஆசிரியர் மூலமாக பிரஞ்சு மொழியைக் கற்றார். தம் குழந்தைப் பருவத்திலேயே பிரெஞ்சு மொழியிலும் சுபானிசு மொழியிலும் புலமை பெற்றிருந்தார்.விக்டோரியா லனாசியன் என்னும் நாளேட்டில் கவிதைகள் கட்டுரைகள் எழுதி வந்தார்.
தாகூரும் விக்டோரியாவும்
[தொகு]1924 இல் ரவீந்திரநாத் தாகூர் போனர்ஸ் அயர்சுக்குச் சென்றார்.அப்பொழுது விக்டோரியாவின் தொடர்பும் நட்பும் கிடைத்தன. விக்டோரியா இலக்கிய ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும் தாகூரின் கீதாஞ்சலியின் மொழி பெயர்ப்பைப் படித்து இருந்தார். எனவே தாகூரின் மீது பற்றும் மதிப்பும் ஏற்பட்டது.அப்போது உடல் நலம் குன்றி இருந்த தாகூரை தம் இல்லத்தில் தங்க வைத்து பார்த்துக் கொண்டார்.இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு பழகினர்.தாகூரிடமிருந்த ஓவியத் திறமையை வெளிக்கொணர்ந்ததில் விக்டோரியாவுக்குப் பெரும் பங்கு உண்டு. 1952 ஆம் ஆண்டில் விக்டோரியா தம் வரலாற்றை எழுதத் தொடங்கினார்.அந்நூலில் தாகூர் பற்றி நூறு பக்கங்களுக்கு மேல் எழுதியிருந்தார். இந்தப் புத்தகம் அவர் இறந்த பிறகே வெளிவந்தது.
பிற நிகழ்வுகள்
[தொகு]- இலத்தின் அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய 'சூர்' என்னும் இலக்கிய இதழைத் தொடங்கினார்.
- இரண்டாம் உலகப் போரில் நாசிகளுக்கு எதிரான இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
- 1953 ஆம் ஆண்டில் இவர் எழுதிய சில கருத்துகள் தாய் நாட்டுக்கு எதிராக இருப்பதாகக் கருதி அன்றைய அரசு விக்டோரியாவைச்
- சிறையில் அடைத்தது.இந்தியாவின் தலையீட்டுக்குப் பின் அவர் விடுதலை ஆனார். இதற்காக நேருவுக்கு நன்றி தெரிவித்து விக்டோரியா மடல் எழுதினார்.
- இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அர்ஜென்டினாவுக்குச் சென்றார் அப்போது விக்டோரியாவை அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்தார்.
- விஸ்வ பாரதி பல்கலைக் கழகம், இவருக்குச் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கியது.
- 1973 இல் தம் வீட்டை கலை பண்பாட்டு வளர்ச்சிகளுக்காக உனேசுகோ அமைப்பிற்கு நன்கொடை வழங்கினார்.
- 1976 இல் ஆர்ஜன்டினா அகாதமியில் உறுப்பினர் ஆனார்.
1979 ஆம் ஆண்டில் சனவரி 26 இல் வாயில் ஏற்பட்ட புண்ணின் காரணமாக இறந்தார்.
படைப்புகள்
[தொகு]De Francesca a Beatrice
Domingos en Hyde Park
El Hamlet de Lawrence Oliver
Emily Bronte (terra incognita)
Virginia Woolf
T.E.Lawrence of Arabia