விக்கி நினைவுச்சின்னங்களை விரும்புகின்றது
Jump to navigation
Jump to search
விக்கி நினைவுச்சின்னங்களை விரும்புகின்றது என்பது செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் வருடாந்திர புகைப்பட போட்டியாகும். இதில் கலந்து கொள்பவர்கள் அவர்கள் பகுதியில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்களையும், பாரம்பரியக் களங்களையும் படமெடுத்து விக்கிமீடியா பொதுவில் பதிவேற்றுவர். இந்த நிகழ்வின் குறிக்கோளானது பங்குபெறும் நாடுகளில் உள்ள பாரம்பரியக் களங்களை முன்னிலைப்படுத்துவதே ஆகும்.
இந்தப் போட்டி முதலில் நெதர்லாந்தில் 2010ஆம் ஆண்டு நடந்தது. 2012ல் ஐரோப்பா மட்டுமல்லாமல் மொத்தம் 35 நாடுகளுக்கு மேல் இப்போட்டியில் பங்கேற்கின்றன.