விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review/இரண்டாவது பக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Reply for the Annual Report 2009[தொகு]

பெரியண்ணன்[தொகு]

  • ஆண்டறிக்கை-2009-ஐ கண்டேன். நன்று.
  • தங்கள் அனைவரது கவனத்திற்கும்---கீழே அட்டவணையில் எனது கருத்துக்களை சுருக்கமாக பட்டியலிட்டுள்ளேன்.

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:17, 4 பெப்ரவரி 2010 (UTC)

ஆண்டறிக்கையில் குறிப்பிட்ட செய்தி அறிந்து கொண்ட மேல் விவரங்கள் 2010-ம் ஆண்டில் இவற்றை செய்தால் மேலும் முன்னேற்றம் காண வாய்ப்புண்டு மற்ற பயனர்களும் அதிகாரிகளும் தங்களுடைய கருத்துக்களையும் பதிலையும் இங்கே கொடுக்கவும்.
* பயனர்களின் எண்ணிக்கை 2009- ம் ஆண்டில் இரட்டிப்பாகியுள்ளது (= 13,486) மகிழ்ச்சிக்குறிய செய்தி.
  • தற்போதய கணக்கு படி ( தேதி: 01-02-2010)
  • மொத்த பயனர்கள் = 14,950
  • தொடர்ந்து பங்களிக்கும் பயனர்கள் = 190
  • கடந்த ஒரு மாதத்தில் தொகுத்தவர்கள் எண்ணிக்கை: ( >தொகுப்புக்கள் = பயனர்கள்)
    • >50 = 13, >100 = 10 , >200=7, >300=5, >500=2
    • ஆக மொத்தத்தில் 13 பயனர்கள் மட்டுமே, உண்மை நிலையில் தொடர்ந்து பங்காற்றியவர்கள் என்பது எனது கருத்து.
  • தொடர் பங்களிப்பாளர்களின் சதவிகிதம் (%)மொத்த பயனர்களுடன் ஒப்பிடுகையில்= 0.78 % (< 1 %)
  • இது 1%லிருந்து 2% வரை இருந்தால் நல்லது
  • புள்ளிவிவரத்தைப் பாருங்கள். (Statistics) http://meta.wikimedia.org/wiki/Complete_list_of_language_Wikipedias_available--- இதில், (Active Users)--- தொடர் பங்களிப்பாளர்கள் (190) பட்டியலை பார்த்தால், அது மொத்த பயனர்களின் பட்டியலைத் தருகிறது. மேல் விலாசத்தில் (Address) ActiveUsers--- என்று கொடுத்தபின், தொடர் பங்களிப்பாளர்களின் விவரம் கிடைக்கிறது.
  • முதல் வேலையாக இந்த தவற்றை சரிசெய்ய வேண்டும்.
  • மொத்த பயனர்கள் 14,950 பேரில், தொடர் பங்காற்றுபவர்கள் 190 பேர்கள். இதில் 50 தொகுப்புக்கு மேல் தொகுத்தவர்கள் 13 பேர்கள் மட்டுமே. ஆக இந்த 13 பேர்கள் மட்டுமே உண்மை நிலையில் தொடர் பங்காற்றுபவர்கள் என்பது தெரிகிறது.
  • மீதம் உள்ள பல்லாயிரக்கணக்கான பயனர்கள், அவர்கள் இங்கு ஏதாவது பங்களிக்க எண்ணி பதிவு செய்தபின், ஏதும் செய்ய முடியாமல், பறந்தோடிவிட்டார்கள் என்பதையே, புள்ளிவிவரம் எடுத்துரைக்கின்றது.
  • அவர்கள், ஏன் பங்களிக்க இயலவில்லை என்பதனை ஒரு கருத்தாய்வின் (Survey---within Tamil Wikipedia---Link from First Page) மூலம் கண்டறிந்து, அதன்படி, முன்னேற்ற சிந்தனையுடன் ஒரு சில செயல்களை செய்து முடிக்க வேண்டும்.
  • இதில் முக்கிய காரணம் --- தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாததே --- என்பது எனது கருத்து.
  • என்னுடைய கவனிப்பின் படி, தினமும் 10-க்கு மேற்பட்ட புதுப்பயனர்கள் வருகிறார்கள். அவர்கள், ஆங்கிலத்தில் மனதுக்குப்பிடித்ததை எழுதிவிட்டுப் போய்விடுகிறார்கள். இவர்கள் எழுதியதை, Kanags --- அவர்கள், தினமும், பார்த்தவுடன் நீக்கிவருகிறார்கள். நல்ல பணியே. தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் உயர இதுவே சரியான வழியாகும்.
  • இப்படி வருகை புரிந்து எந்தவிதமான பங்காற்றாமல் மாயமாய் மறைந்து போவோரிடம், மீண்டும் வருகை தரும்போது, கட்டாயமாக மேலே கூறியுள்ள அந்த கருத்தாய்வை நடத்தி அவர்களுடைய எண்ணத்தை அறிந்து, அதன்படி, நம்மால் முடிந்த அளவுக்கு, அவர்களுக்கு உதவ வேண்டும்.

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இணைய இணைப்பு பெரும்பான்மை மக்களை சென்றடையவில்லை, அப்படி கிடைத்தாலும் தமிழ் கணிமை பற்றிய அறியாமை, இவற்றை மீறி வருபவர்கள், தமிழில் ஓரளவு எழுத திறமை ஆர்வம் வேண்டும். --Natkeeran 03:32, 6 பெப்ரவரி 2010 (UTC)

  • தாங்கள் நேரம் ஒதுக்கி, முழுவதையும் படித்துத் தங்களின் கருத்துக்களைக் கூறியமைக்கு நன்றி.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:00, 6 பெப்ரவரி 2010 (UTC)

இரண்டு பயிற்சி பட்டரைகள் --- சென்னையிலும் பெங்களூரிலும் நடத்தப்பட்டது மகிழ்சியான செய்தியே.

---
  • மேலும், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகர்களிலும், மக்கள் தொகை அடிப்படையில், அதிக மக்கள் தொகை உள்ள நகரில் தொடங்கி, படிப்படியாக எல்லா மாவட்டத் தலைநகர்களிலும் பயிற்சி பட்டறைகளை நடத்தி முடிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் ஒரு பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
    • மேலும் மாணவர்களுடைய கோடைக்கால விடுமுறையில் பயிற்சி பட்டறைகள் நடத்துவதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் மாணவர்களுக்கும் நன்மை பயப்பதாக மாற்ற முடியும்.
பட்டறைகளை நடத்த தேவையான துண்டறிக்கை, நிகழ்த்துதல் (ppt), முன்மாதிகள் உள்ளன. ஒழுங்கமைப்பை செய்து உதவினால் நிச்சியம் செய்யலாம். --Natkeeran 03:32, 6 பெப்ரவரி 2010 (UTC)

மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராச்சியாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொது வாசகர்கள் எனப் பலதரப்பட்டோருக்கும் தமிழ் விக்கிப்பீடியா பயன்படுகிறது. எ.கா மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவை பாட வேலைக்குப் பயன்படுத்துகிறார்கள்.

இது மிகவும் மகிழ்ச்சிக்குறிய செய்தி. இந்த ஆண்டறிக்கையை படிக்கும், பயனர்களுக்கும் பங்களிப்பாளர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய செய்தியாகும். தான் எழுதியவை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் யார்தான் மகிழ்ச்சியடைய மாட்டார்கள் ?

பொதுவாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் யார் பங்களிக்க முடியும் அல்லது எதைச் செய்தால் பயனர்களும் பங்களிப்பாளர்களும் எண்ணிக்கையில் கூடுவர் என்பதற்கான எனது கருத்துப்பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்.

  • வீட்டில் கணினி வைத்திருப்போர்.
  • பள்ளி மாணவர்கள் ( 6 முதல் +2 வரை), கல்லூரியில் தமிழ் வழி கற்கும் மாணவர்கள் --- இவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நடத்தி அறிமுகம் செய்து வைப்பதன் மூலம்.
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் (ta-0 to ta-4) என்று குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் தெரிந்த விக்கிப்பீடியாவுக்கு பழக்கப்பட்டுப்போன பங்களிக்கும் பயனர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம்.
  • ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தங்களது அறிவு பூர்வமான தரமான கட்டுரைகள் எழுதுவதன் மூலம்.
  • பத்திரிக்கைகளில் முதல், கடைசி அல்லது அவற்றின் உட்பக்கத்தில் ஒரு வரி விளம்பரம் இலவசமாக செய்ய கேட்டுக்கொள்வதன் மூலம்.
  • மேலும், பயனர்களிடம், தமிழ்99---தட்டச்சு உதவியை கட்டாயமாக பதிவிறக்கம் செய்து தொடர்ந்து பயிற்சி செய்யுமாறு வேண்டுவதன் மூலம்.
நீங்கள் சுட்டிய பலவற்றை செய்து வருகிறோம். உங்களின் பங்களிப்பும் மேலும் உதவும். --Natkeeran 03:32, 6 பெப்ரவரி 2010 (UTC)

எளிய தமிழ், தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் --- என்ற குறிக்கோள் நன்று.

அதே சமயத்தில் என்றும் கேட்டிராத, படித்திராத பல தமிழ்ச்சொற்கள் அவ்வப்போது கண்ணில் தென்படுகிறது.

  • அப்படிப்பட்ட சொற்களை குறிப்பிடுவதற்கு, ஒரு தனிப்பகுதி அமைக்க வேண்டும்.
  • மேற்கூறிய வார்த்தைகள் தமிழ் விக்சனரியில் உள்ளதா / இல்லையா (நீலம் / சிவப்பு) அடையாளங்களையும் கொடுக்க வேண்டும்.
  • மேலும், தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து சொற்களை தமிழ் விக்சனரியில் தெரிந்து கொள்ள நேரடித் தொடர்பையும் ஏற்படுத்த வேண்டும்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள சொற்கள் அத்தனையையும் ஒரு பட்டியலிட்டு, அதனை எத்தனை முறை உபயோகப்படுத்தப்பட்டது என்ற விவரத்துடன் கொடுக்க வேண்டும்.
பிறகு அவ்வாறு தொகுக்கப்பட்ட சொற்கள், தமிழ் விக்சனரியில் உள்ளனவா என்பதனையும் கண்டறிய வேண்டும். உள்ள சொற்களுக்கு நீலம், இல்லாத சொற்களுக்கு சிவப்பு நிறமும் கொடுத்து பட்டியலிட வேண்டும்.
அவைகளை தமிழ் விக்சனரியில், சிவப்பு நிற சொற்களை மட்டும் ---தமிழ் விக்கிப்பீடியாவில் வேண்டிய சொற்கள்--- என்று தனிப்பட்டியல் கொடுக்க வேண்டும். (தற்போது தமிழ் விக்சனரியில் சிறப்பு பகுதியில் ---வேண்டிய பக்கங்கள்---உள்ளது போல.)
இவ்வாறு பட்டியலிட்டுக் கொடுப்பதன் மூலம், மேலும் ஒரு லட்சம் (1,00,000) புதிய சொற்களைத் தமிழ் விக்சனரியில் உருவாக்க முடியும். தற்போது தமிழ் விக்சனரி 15-வது இடத்தில் உள்ளது. அதனை 7 அல்லது 8-வது இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.
---