விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் இணைய மாநாட்டுக்கான கட்டுரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Full Name: முரளிதரன் மயூரன்  
Location (City/Country) : திருக்கோணமலை, இலங்கை 
Email Address: mmauran@gmail.com 
Title of the Paper: தமிழ் விக்கிபீடியாவும் துணைத்திட்டங்களும் : அறிமுகம், தமிழ் இணையத்தில் அவற்றின் வகிபாகம், எதிர்காலம், செயன்முறை விளக்கம்  
Abstract (max. 2000 words)  Text can be in English or Tamil (Unicode) or Bilingual ! 

வாசகர்கள்/நோக்கம்[தொகு]

இக்கட்டுரை தமிழ் விக்கிபீடியர்களையும் தமிழ் விக்கிபீடியா தொடர்பான நல்ல அறிமுகத்தைக்கொண்டவர்களையும் தனது முதன்மை வாசகர்களாக/கேட்பவர்களாக கொள்ளாமல் பரந்தளவிலான தமிழ் இணையப்பயனர்களைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்படுகிறது.


பரந்தளவில் தமிழ் இணையத்தில் திறந்த புலமைச்சொத்து, கூட்டுழைப்பு போன்ற கோட்பாடுகளுடன் விக்கிபீடியாவையும் அதன் துணைத்திட்டங்களையும் அறிமுகப்படுத்தி இப்பணிகளில் மேலும் பலரை இணைத்துக்கொள்ளும் நோக்கத்தினைக்கொண்டது.


தமிழ் இணைய மாநாடு 2009 இதற்கான சரியான காலப்பகுதியில் நடைபெறுவதாலும், அது இந்நோக்கங்களைத் தாங்கி வரும் இக்கட்டுரை சமர்ப்பிக்கப்படுவதற்கான மிகச்சரியான களமாக இருப்பதனாலும் அம்மாநாட்டுக்கென இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது.


விக்கிபீடியா அறிமுகம்[தொகு]

விக்கிபீடியாவின் பின்னணியாய் அமையும் கோட்பாடுகள், விக்கிபீடியாவின் வரலாறு, விக்கிபீடியா சமூகம் தொடர்பான அறிமுகம்

கட்டற்ற திறந்த மூல இயக்கம் , திறந்த புலமைச்சொத்து தொடர்பான அறிமுக விளக்கங்களும் அக்கோட்பாடுகள் விக்கிபீடியாவை எவ்வாறு உருவாக்க விழைந்தன, விக்கிபீடியா ஊடாக வெற்றியை நிரூபித்தன என்பனபோன்ற தகவல்கள்.


தமிழ் விக்கிபீடியா அறிமுகமும் தகவல்களும்[தொகு]

தமிழ் விக்கிபீடியாவின் உருவாக்கம், வரலாறு, தமிழ் விக்கிபீடியர் சமூகம் தொடர்பான அறிமுகங்களும் தமிழ் விக்கிபீடியா தொடர்பான புள்ளிவிபரங்கள், சிறு ஆய்வுரீதியான தகவல்கள்.

தமிழ் விக்கிபீடியாவின் புள்ளிவிபர அறிக்கைகளும், தமிழ் விக்கிபீடியா தொடர்பான ஏனைய கற்கைகளும் உள்ளடக்கப்படும்.

ஆங்கில விக்கிபீடியா, பொதுவாக ஏனைய மொழி விக்கிபீடியாக்களுடன் தமிழ் விக்கிபீடியாவினை ஒப்பிடலும், வேறுபாடுகள், ஒற்றுமைகள் போன்றவற்றை விளங்கிக்கொள்ளலும்.


விக்கி தொழிநுட்பம், பாதுகாப்பு, நடைமுறைகள் பற்றிய அறிமுகம்[தொகு]

விக்கிபீடியா கோட்பாடு ஒருபுறமும் தொழிநுட்பம் மறுபுறமாயும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்தும் விக்கிபீடியா என்கிற அசைவியக்கத்தை நடத்திச்செல்வது தொடர்பான விளக்கங்கள்.

விக்கி முறைமை இயங்கும் தொழிநுட்ப அடிப்படைகள் குறித்த அறிமுகம்.

விக்கிபீடியாவில் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள், நிர்வாக முறைகள் போன்றன குறித்த ஆழமான பார்வை.


விக்கிபீடியாவின் போதாமைகள், அவற்றை நிவர்த்திக்க எடுத்துக்கொள்ளப்பட்ட, எடுத்துக்கொள்ளப்படக்கூடிய முயற்சிகள் குறித்த உரையாடல்.

விக்கிக் குற்றங்கள், பொதுவாக விக்கிபீடியர்கள் கடைப்பிடிக்க எதிர்பார்க்கப்படும் ஒழுக்கங்கள், பொறுப்புக்கள் போன்றன பற்றிய விளக்கம்.


தமிழ் இணையச் சூழலும் விக்கி அசைவியக்கமும்[தொகு]

தமிழ் இணைய உள்ளடக்கத்தை உருவாக்குவதில் விக்கி அசைவியக்கம் ஏற்றுக்கொண்டுள்ள வகிபாகம்.

தமிழில் திறந்த உள்ளடக்கத்துக்கான தேவை.

தமிழில் திறந்த கூட்டுழைப்பு மூலமாகவே நடுவப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் யதார்த்தமும் சாத்தியங்களும்.

தமிழ் இணையத்தின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழி, மொழிசார் மக்களின் மேம்பாட்டுக்கும் விக்கி அசைவியக்கம் ஆற்றக்கூடிய பங்களிப்புக்கள்.

தமிழ் இணையக்குடிமக்கள் விக்கி அசைவியக்கத்துடன் இணைவதற்கான, விக்கி அசைவியக்கத்துக்குப் பங்களிப்பதற்கான சாத்தியங்கள்.

விக்கி அசைவியக்கங்களில் அரசுகள் தொடக்கம் பலம் வாய்ந்த நிறுவனங்கள் வரை பங்குபற்ற முன்வரவேண்டிய தேவைகள் குறித்த உரையாடல்

உறவுத் விக்கித்திட்டங்கள்[தொகு]

தமிழில் வெற்றிகரமாக இயங்கும், தமிழ் இணையத்துக்குப் பயனுள்ள ஏனைய சகோதர விக்கித்திட்டங்கள் குறித்த அறிமுகம்.

தமிழ் விக்சனரி : தமிழுக்கான நடுவப்படுத்தப்பட்ட பன்மொழி அகரமுதலியாக இது இருக்கும் பாங்கினை விளக்குதலும் விக்சனரியை அண்டி ஏற்பட்டுள்ள கலைச்சொல்லாக்க அசைவியக்கம் பற்றிய சிறு அறிமுகங்களும்.

தமிழ் விக்கிமூலம் திறந்த புலமைச்சொத்துக்கள், தமிழின் மூல நூற்களை, அறிவு மூலங்களை இதன்வழி இணையத்தில் வைத்திருப்பதற்கான வழிவகைகள் தொடர்பான உரையாடல்

தமிழ் விக்கிநூல்கள் திறந்த நிலையில் கூட்டுழைப்பாக நூற்களைத் தமிழில் உருவாக்கும் வாய்ப்புக்கள் பற்றியும் அதற்கு விக்கி நூல்களைப் பயன்படுத்துவதில் ஏற்படக்கூடிய போதாமைகள், நன்மைகள் போன்றனவற்றை அறிதலும்.


செய்துகாட்டல்[தொகு]

விக்கிபீடியாவுக்கு பங்களிப்பது எப்படி என்பது குறித்த அடிப்படையிலுருந்தான செயன்முறை விளக்கம். மாநாட்டின் அரங்கத்தின் சாத்தியப்பாடுகளைப்பொறுத்து இதனை வடிவமைத்துக்கொள்ளலாம். பின்வரும் படிமுறைகள் உள்ளடக்கப்படும்.

  • மாதிரிக்கட்டுரைகள் உருவாக்குதல்
  • திருத்துதல்
  • கண்காணிப்பு நடவடிக்கைகளை நேரடியாகக் கண்டுணர்தல்
  • மீடியா விக்கி நடையியல்
  • கலைக்களஞ்சிய நடை பற்றிய அறிமுகம்