விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

the external link to pathivukaL site may not be needed because it just mirrors tamil wikipedia introductory content??--ரவி 19:59, 24 ஏப்ரல் 2006 (UTC)

தமிழ் விக்கிபீடியாவை ஆறிமுகப்படுத்தல் என்பது சற்று கூடிய பொருத்தம் உள்ள தலைப்பாக இருக்குமா?--Natkeeran 05:16, 10 டிசம்பர் 2006 (UTC)

இனம் வாழ மொழி காப்போம்! மொழி காக்க விக்கிப்பீடியாவுக்கு பங்களிப்போம்.[தொகு]

உலகில் தமிழர் பரந்து வாழ்கிறோம். தமிழையும் பண்பாட்டையும் பேண பல்வேறு வழிகளில் நாம் முயற்சி செய்கிறோம். தனித்தும், அமைப்பு முறையிலும் நாம் இயங்கி வருகிறோம். எமது நோக்குகள் ஒன்றாக இருப்பினும் எமது செயற்பாடுகள் பரந்து, தொடர்பற்று இருக்கின்றன. அது இயல்புதான். இருப்பினும் சில விடயங்களில் கூட்டாக செயற்பட்டால் பயன் பெருகும், வளங்கள் வீணடிக்கப்படாது. அதற்கமையவே வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை, உலகத்தமிழர் பேரமைப்பு போன்ற குடை அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. அதே வழியில் உருவாகி வருவதுதான் தமிழ் விக்கிப்பீடியா. இது இணையம் மூலம் உலகத்தமிழர் அறிவுத்தளத்தை கூட்டாக அமைக்க முன்னெடுக்கப்படும் ஒரு திட்டம்.

தமிழ் விக்கிப்பீடியா (www.ta.wikipedia.org) ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம். தமிழில் அனைத்த இயல்களையும் ஒரே மையத்தில் குவித்து வகுத்து தர தமிழ் விக்கிப்பீடியா முனைகிறது. இது தன்னாவலர்களால் முன்னெடுக்கப்படும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-பக்க-சாதி-வர்க்க சார்பற்ற, நடுநிலைமைத் திட்டம் ஆகும்.

பொது விக்கிப்பீடியா ஜனவரி 21, 2001 ம் ஆண்டு இணையத்தில் ஆங்கிலச் சூழலில் யாரும் இலகுவில் தொகுக்க கூடியவாறு ஆரம்பிக்கப்பட்ட ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். அனைத்து மனித அறிவும் கட்டற்ற முறையில் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று உலகளாவிய மனித கூட்டுமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக இது விளங்குகிறது. தமிழ் விக்கிப்பீடியா பொது விக்கிப்பீடியா திட்டத்தின் ஒர் அங்கமே. இருப்பினும் எமக்கு உள்ளடக்கம் நோக்கிலும் திட்ட நிறைவேற்றல் நோக்கிலும் அனைத்து சுதந்திரங்களும் உண்டு. தமிழ் விக்கிப்பீடியா முயற்சியானது 2003 ஆம் ஆண்டு ஆரம்பமானது தற்போது (ஏப்ரல் 14, 2008) இதில் 13,511 கட்டுரைகள் உள்ளன. 2,943 பயனர் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இவற்றை 14 நிர்வாகிகள் நிர்வாகிக்கின்றனர்.

அனைவரும் நேரடியாக அவர்களின் ஈடுபாடு திறன்களுக்கு ஏற்றவாறு, அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் இணையம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்க முடியும். கட்டுரை உருவாக்கம், மேம்படுத்தல், வகைப்படுத்தல், பக்க வடிவமைப்பு, தள பராமரிப்பு, நுட்ப நெறிப்படுத்தல் என பல வழிகளில் பயனர்கள் பங்களிக்க முடியும்

தமிழ் விக்கிப்பீடியா அறிவியல் தமிழ் வளர பரவ ஒரு நல்ல ஊடகம். உலகத்தமிழர் அனைவரும் கலைச்சொற்கள் பற்றிய ஒரு கருத்துரையாடலில் ஈடுபட்டு கலைச்சொற்களை தரப்படுத்த தமிழ் விக்கிப்பீடியா உதவுகின்றது. எழுத்து தமிழில் உலகத்தமிழர் மத்தியில் இருக்கும் ஒரு சில வேறுபாடுகளைப் பற்றிய புர்ந்துணர்வையும் தமிழ் விக்கிப்பீடியா உருவாக்க உதவுகிறது.

தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து பிற திட்டங்களும் உள்ளன. அவை தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிமூலம், தமிழ் விக்கிநூற்கள், தமிழ் விக்கிமேற்கோள்கள் ஆகும். தமிழ் விக்சனரியில் 100 000 மேற்பட்ட சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் விக்கிமூலம் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஜெயமோகன், வெங்கட் சாமிநாதன் போன்ற அறியப்பட்ட எழுத்தாளர்கள் உட்பட பலரின் ஆக்கங்கள் மூலப்பிரதியாவே அங்கு கிடைக்கும். தமிழ் விக்கிநூற்கள் விக்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையத்தில் நூற்களை ஆக்க முன்னெடுக்கப்படும் ஒரு திட்டமாகும். தமிழ் விக்கிமேற்கோள்கள் அறிஞர்களின் மேற்கோள்களை தொகுத்து தருகிறது.

இது அறிஞர்களுக்கு மட்டும் என்று ஒதுக்கு விடாதீர்கள். அனைவரும் இலகுவாக இணைந்து பங்களிக்க முடியும். சிறு கட்டுரைகளே நல்ல பலன் தரும். இதில் பல இளைஞர்களும் மூத்த அறிஞர்களும் இணைந்து பங்குபெற்றுவது ஒரு சிறப்பு. தமிழை கற்கவும் தமிழ் விக்கிப்பீடியா ஒரு நல்ல ஆயுதம். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியத்தை ஆக்குவதே எமது முதன்மைக் குறிக்கோள், எனவே தயங்காமல் உலகத்தமிழர் அனைவரும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்க அன்புடன் அழைக்கிறோம். மேலதிக தகவல்களுக்கு www.ta.wikipedia.org வந்து பாக்கவும்.