விக்கிப்பீடியா பேச்சு:சமயக் கட்டுரைகள் எழுதல் கையேடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்புகள்[தொகு]

  • சமயக் கட்டுரைகள் எழுதும்பொழுது சமய நம்பிக்கையுடையோரின் மனதை நோகடிக்காமல் இருப்பது முக்கியம்.
  • அதேவேளை கலைக்களஞ்சியத்தின் முக்கிய நோக்கம் ஆதாரபூர்வமான தகவல்களை முன்வைப்பதுதான்.
  • நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட சமயக் கருத்துக்களை ஆதாரபூர்வமான முறையில் எப்படி எழுதுவது என்பதுவே சமயக் கட்டுரைகளில் இருக்கும் சிக்கல்.
  • சமயக் கட்டுரைகளை பரப்புரையாக எழுதுதல் முற்றாக தவிர்க்கப்படவேண்டும்.
  • சமயக் கட்டுரைகளை எழுதும் பொழுது பகுத்தறிவுக்கு தெளிவாக மூடநம்பிக்கைகள் என்று தெரிபவற்றை தவிர்க்கலாம், அல்லது அவை மூடநம்பிக்கைகள் என்பதையும் அல்லது என்ற பார்வையையும் சேர்த்தல் அவசியம்.
  • சமயக் கருத்துக்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவையா? அல்லது கடவுளால் மனிதனுக்கு தரப்பட்டவையா? இந்த விடயத்தை தேவைப்படும் இடங்களில் வேறுபடுத்தி காட்டுதல் நன்று.
  • நடைமுறைச் சமயம் எதிர் கருத்தியல் சமயம்?
  • "அற்புத நிகழ்சிகளுக்கு" நூல்களை விட பிற ஆதாரங்கள் உண்டா?
  • "உண்மைகள்" என்று தரும் விடயங்களுக்கு சமய நூல்களைத் தவிர வேறு ஆதாரங்கள் இல்லையென்றால், அவை "சமய நம்பிக்கைகள்/உண்மைகள்" என்று தருதல் நன்று.
  • புனிதப்படுத்தல் தவிர்க்கப்படுதல் நன்று.
  • சமயக் கருத்துக்களுக்கும் அறிவியற் கோட்பாடுகளுக்கும் காணப்படும் முரண்பாடுகள் தெளிவாக சுட்டிக்காட்டப்படல் வேண்டும்.

--Natkeeran 01:21, 29 டிசம்பர் 2006 (UTC)

ஸ்ரீ ஸ்வாமிஜி என்று விளித்து விக்கிபீடியா கட்டுரைகள் எழுதப்படுவது சரியா?[தொகு]

ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களையே பெயர் சொல்லிக் குறிப்பிட்டு எழுத இயலும்போது, இவரை ஒத்தவர்களை ஸ்ரீ ஸ்வாமிஜி என்று விளித்து விக்கிபீடியா கட்டுரைகள் எழுதப்படுவது சரியா? நபர்களை அவர்களைப் பின்பற்றுபவர்கள் பார்வையில் இருந்து அல்லாது நடுநிலைப் பார்வையில் இருந்து பார்த்து எழுதுவது முக்கியம். இது குறித்த தமிழ் விக்கிபீடியா கொள்கைகள், வழிகாட்டல்கள் ஏதும் உரையாடப்பட்டால் நன்று. --ரவி 23:15, 9 டிசம்பர் 2007 (UTC)

மேலும் கருத்துகளை Wikipedia பேச்சு:சமயக் கட்டுரைகள் எழுதல் கையேடு தரவும். நன்றி. --Natkeeran 23:26, 9 டிசம்பர் 2007 (UTC)