விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரை ஆக்கப் போட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்போது சிலர் தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து கட்டுரைப் போட்டிகள் நடத்துவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கான பொதுவான ஒரு வழிகாட்டலைக் கீழே உரையாடலாம்.

கட்டுரைப் போட்டிக்கான எளிய விதிகள்:

1. குறைந்தது ஒரு மாத போட்டிக் காலம். (போட்டிக் கூட்டாளியின் விருப்பத்துக்கு ஏற்ப இக்காலத்தைக் கூட்டவும் செய்யலாம்) போட்டிக் காலம் முழுமைக்கும் ஒருவர் தமது கட்டுரைகளைத் தொடர்ந்து சீராக்கலாம்.

2. யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஒருவர் எத்தனை கட்டுரை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், ஒரே பெயரில் எழுத வேண்டும். ஒருவருக்கு ஒரு பரிசு மட்டுமே. பரிசு அறிவிக்கப்பெற்ற பின், பரிசு பெறுபவர் தங்களின் தொடர்பு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அது வரைத் தொடர்பு விவரங்கள் அறிவிக்கத் தேவை இல்லை. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் போன்ற குறிப்பிட்ட பிரிவினருக்கான போட்டிகள் என்றால், அவர்களும் வென்ற பிறகு அடையாளச் சான்றுகளைப் பெற்றுத் தந்தால் போதும். தொடக்கத்திலேயே அவர்களுக்குத் தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்க்க உதவும்.

3. கட்டுரைகளை நேரடியாக தமிழ் விக்கித் தளத்தில் எழுத வேண்டும். எனவே, போட்டிக் கட்டுரைகள் அனைத்தும் தாமாகவே விக்கி காப்புரிமை கொள்கைக்கு உட்படும். நேரடியாக இங்கேயே எழுதுவதனால் விக்கியின் உள்ளடக்கம் கூடும். அதே வேளை, வெளியில் எழுதி அவற்றை நாம் இங்கு வெட்டி ஒட்ட வேண்டிய பணிப் பளுவையும் குறைக்கும். நேரடியாக இங்கு எழுதுவதனால் போட்டியாளர்கள் விக்கியின் தன்மையை அறிந்து தொடர் பங்களிப்பாளர்களாக மாறலாம். போட்டியாளர்களை இப்படி பங்களிப்பாளர்களாக மாற்றுவதே போட்டியின் உண்மையான வெற்றியாகவும் விக்கிக்கு தொலைநோக்கு நன்மையாகவும் அமையும்.

3. குறிப்பிட்ட கட்டுரைகளில் {{போட்டிக் கட்டுரை}} என்ற வார்ப்புரு இடலாம். போட்டிக் காலம் முடியும் வரை பிறர் இக்கட்டுரைகளில் பெரிய அளவு திருத்தத்தில் ஈடுபடாமல் இருக்கலாம்.

4. பிற மொழி கட்டுரைகளை மொழிபெயர்க்கலாம். ஆனால், ஏற்கனவே தமிழில் அச்சு, ஒலி, இணையத்தில் வெளியான கட்டுரைகளை படியெடுத்தோ ஒத்தோ எழுதக்கூடாது.

5. கட்டுரைகளின் originality, மொழி நடை, சொல் திறம், முழுமைத் தன்மை முதலியவற்றின் அடிப்படையில் வெல்பவர்களை அறிவிக்கலாம். நல்ல தரத்தில் நிறைய கட்டுரைகள் எழுதுபவருக்குச் சிறப்புப் பரிசு ஒன்று அளிக்கலாம். இதனால் ஒரே போட்டிக் கட்டுரையுடன் நின்றுவிடாமல் நிறைய கட்டுரைகள் எழுதத் தூண்டுதலாக இருக்கும்.

6. போட்டி முடிவுகளை அறிவிக்கும் குழுவில் விக்கிப்பீடியர், நிதி ஆதரவுக் கூட்டாளிகள் ஆகியோர் சம எண்ணிக்கையில் இருக்கலாம்.

7. ஒரு கட்டுரைத் தலைப்பில் ஒருவர் மட்டுமே போட்டி இட முடியும். எனவே ஒருவர் விரும்பும் தலைப்பு ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டால் புதிய தலைப்பை நாட வேண்டும்.

7. என்ன வேண்டுமானால் எழுதலாம் என்றால் போட்டியாளர்கள் குழம்பலாம். எனவே, குறிப்பிட்ட சில தலைப்புகளை இனங்கண்டு அறிவிப்பது நன்று. எடுத்துக்காட்டுக்கு, உலகத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், உலக மொழிகள், உலக இனங்கள், நாணயங்கள், விலங்குகள்.. இப்படி சில தலைப்புகள். அல்லது, தேவைப்படும் கட்டுரைகளைக் கருத்தில் கொண்டு ஆயிரக்கணக்கான கட்டுரைத் தலைப்புகளை சிகப்பு இணைப்புகளாக உருவாக்கி ஒரு பக்கத்தில் தரலாம்.

Katurai[தொகு]

Nice Averiomadhu (பேச்சு) 14:38, 7 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]