விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2021 எனும் கட்டுரை எழுதும் திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதுவதனை ஊக்கப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த ஆண்டிற்கான இந்தத் திட்டம் செப்டெம்பர் 1, 2021 முதல் செப்டெம்பர் 31,2021 வரை நடைபெறுகிறது.
கருப்பொருள்....
இவ்வருட விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா திட்டம் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருட்களாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.
ஏன் பங்குபற்ற வேண்டும்?
▶ விக்கிப்பீடியாவிற்கு உதவுதல்
பாலின இடைவெளியை குறைப்பதற்கும் அதிக பன்மயத்துடன் வளப்படுத்த விக்கிப்பீடியாவிற்கு உதவுதல்.
▶ இது பரிசோதனை செய்யவும் மேலதிகமாக கற்கவும் ஒரு பெரும் வழியாகும்.
இதில் பங்களிப்பதால் நீங்கள் பெரியளவில் கற்றுக்கொள்ள வழியேற்படுத்தும். இவ்விடயம் தொடர்பில் ஆழமாக அறியவும் உதவும். நீங்கள் இவ்விடயம் தொடர்பில் அதிக ஆர்வம் இல்லாதவராயினும், புதிதாக அறிந்திட உதவும்.