விக்கிப்பீடியா:பெண்ணியமும் நாட்டார் மரபும் 2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்ணியமும் நாட்டார் மரபும் 2021 திட்டமானது, விக்கிப்பீடியாவில் கலாச்சாரப் பன்முகத்தன்மையை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டு விக்கிமீடியா அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. இந்தாண்டு குறிப்பாக உலகளாவிய நாட்டார் மரபுகளை ஆவணப்படுத்தவும், பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும் முயல்கிறது மேலும் அதை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது.


விதிகள்[தொகு]

  • கட்டுரைகளின் கருப்பொருள்கள் நாட்டுப்புறக் கலைகளுடன் தொடர்புடைய பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும்
  • நீங்கள் உருவாக்கும் புதிய அல்லது விரிவாக்கும் கட்டுரைகள் குறைந்தது 300 சொற்களையும், 3000 பைட்டுகள் அளவு கொண்டதாகவும் அமைய வேண்டும். எழுதும் போதே எண்ணிக்காட்டும் கருவியை இணைத்தும் கொள்ளலாம்.
  • புதிய கட்டுரைகள் அல்லது விரிவாக்கிய கட்டுரைகள் பிப்ரவரி 1 முதல் மார்ச்சு 31 வரையான காலத்திற்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்
  • கட்டுரையில் பதிப்புரிமை மீறல் போன்ற பெரும் தரச் சிக்கல்கள் இன்றி எழுதப்பட வேண்டும்.
  • கட்டுரையில் போதிய அளவு தக்க சான்றுகள் இடம் பெற வேண்டும். இச்சான்றுகள் கட்டுரையில் ஐயம், சர்ச்சை தோற்றுவிக்கக் கூடிய கூற்றுகளைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைய வேண்டும்.
  • கட்டுரையை நீங்களே இயல்பான நடையில் எழுத வேண்டும். தக்கவாறு உரை திருத்தி இருக்க வேண்டும். இயந்திர மொழிபெயர்ப்புகள் ஏற்கப்பட மாட்டா.
  • ஒரு கட்டுரை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பதில், ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.


நடைபெறும் காலம்[தொகு]

பிப்ரவர் 1, 2021 – மார்ச் 31, 2021

பரிசுகள்[தொகு]

அனைத்து மொழிகள் அளவிலும் மற்றும் தமிழ் விக்கி அளவிலும் பரிசுகள் வழங்கப்படும்.

அனைத்து மொழி:

  1. பரிசு: 300 USD
  2. பரிசு: 200 USD
  3. பரிசு: 100 USD

ஆறுதல் பரிசு 15: ஒவ்வொருவருக்கும் தலா 10 USD

தமிழ் மொழி:

  1. பரிசு: 1000 INR
  2. பரிசு: 750 INR
  3. பரிசு: 500 INR


பெயரை இங்கே பதிவு செய்க கட்டுரைகளினை இங்கே பதிவு செய்க

-->

சமர்பிக்க[தொகு]

விரைவில் உருவாக்கப்படும். அதுவரை {{பெண்ணியமும்_நாட்டார்_மரபும்_2021}} என்ற வார்ப்புருவை கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் இணைத்துவிடவும்.

முற்பதிவு[தொகு]

நீங்கள் மேம்படுத்த/ உருவாக்க விரும்பும் கட்டுரைகளை பேச்சுப் பக்கத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரே கட்டுரையை இருவர் எழுதி காலமும் உழைப்பும் வீணாவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு.

தலைப்புகள்[தொகு]

கட்டுரைகளின் கருப்பொருள்கள் நாட்டுப்புறக் கலைகளை அடிப்படையாகக் கொண்டோ, பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும்.

ஒருங்கிணைப்பு[தொகு]

திட்டத்தின் ஒருங்கிணைப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயரைக் கீழே பதிவு செய்க.

  1. நீச்சல்காரன்

நடுவர்கள்[தொகு]