விக்கிப்பீடியா:பிழை திருத்துவது எப்படி?
Appearance
விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கங்களில் ஏதேனும் பிழை உள்ளதாகக் கருதுகிறீர்களா? இந்தப் பிழைகளை நீங்களே திருத்த முடியும். ஆம்! பின்வரும் எளிய வழிமுறைகள் மூலம் நீங்களும் பிழை திருத்தங்களைச் செய்யலாம்!!
- கட்டுரைப் பக்கத்தின் மேல் உள்ள "தொகு" (Beta பதிப்பு என்றால் "மூலத்தைத் தொகு") எனும் பொத்தானை அழுத்துங்கள்.
- தற்போது அந்தக் கட்டுரைக்கான தொகுப்புப் பக்கம் (மின்மடல் அனுப்பும் பெட்டி போல்) பார்வைக்குக் கிடைக்கும். இந்தத் தொகுப்புப் பக்கத்தில் கட்டுரைக்கான உரைநடைப் பகுதி இருக்கும். அதில் தாங்கள் கண்டறிந்த எழுத்துப் பிழை, தகவல் பிழை, இலக்கணப் பிழை போன்றவற்றை நீங்களே திருத்துங்கள்.
- பிழைகளைத் திருத்திய பின், அப்பெட்டியின் கீழ் உள்ள இப்பக்கத்தைச் சேமிக்கவும் என்ற பொத்தானை அழுத்துங்கள்.
- தாங்கள் செய்த பிழை திருத்தங்களுடன் கட்டுரை சிறப்பாகக் காட்சியளிக்கும்.
- கட்டுரை பிழையின்றி இருக்க நீங்களும் உதவலாமே?
தமிழ்த் தட்டச்சு
[தொகு]இப்போது விக்கிப்பீடியாவில் தமிழில் எழுத எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் நிறுவ வேண்டியதில்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் வலது மூலையில் தமிழில் உள்ளிட இரு விருப்பத்தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- எழுத்துப்பெயர்ப்பு --- அம்மா என்பதற்கு ammA அல்லது ammaa
- தமிழ்99 --- தமிழ்99 விசைப்பலகையை அடிப்படையாகக் கொண்டது
உங்களுக்குப் பழக்கமான விசைப்பலகையைத் தேர்ந்தெடுத்த பின், "தமிழில் எழுத" என்று உள்ள பெட்டியில் குறி இடவும். (பார்க்க படம்). CTRL + M என்னும் குறுக்குவிசை கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் மாற்றி எழுதலாம்.