விக்கிப்பீடியா:நல்ல கட்டுரைகள் முன்மொழிவுகள்/வழிமுறைகள்
நல்ல கட்டுரைக்கான அளவுகோல்களின்படி ஒரு நல்ல கட்டுரை நியமனத்தை எவ்வாறு முன்மொழிவது மற்றும் மதிப்பாய்வு செய்வது என்பதை விளக்கும் வழிமுறைகள் கிழே உள்ளன. கட்டுரையின் பரிந்துரைப்பாளர் மற்றும் மதிப்பீடு செய்பவர் ஆகிய இருவருக்கும் அறிவுறுத்தல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
முன்மொழிபவர்கள் கட்டுரைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்க வேண்டும் மற்றும் அதன் பொருள் மற்றும் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
கட்டுரைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்காத எந்தவொரு பதிவு செய்யப்பட்ட பயனரும் முன்மொழிவினை மதிப்பாய்வு செய்யலாம்.
முன்மொழிவு
[தொகு]படி 1: கட்டுரையைத் தயாரிக்கவும்
[தொகு]நடுநிலைக் கண்ணோட்டம், விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை, விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது மற்றும் குறிப்பிடத்தக்க தன்மை உள்ளிட்ட விக்கிப்பீடியா கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்வதை உறுதிசெய்க. பின்னர் நல்ல கட்டுரையின் அளவுகோல்களைப் பூர்த்தி செய்கிறதா எனப் பார்க்கவும் , கட்டுரைகளில் தேவையான முன்னேற்றங்களைச் செய்யவும். மேலதிகத் தகவல்களை Wikipedia:Nominating good articles என்பதில் காணலாம். நீங்கள் கட்டுரைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இல்லாவிட்டால், முன்மொழிவதற்கு முன்பு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்களின் ஒப்புதலைப் பெறுங்கள். நீங்கள் முன்மொழிவு செய்யும் கட்டுரைகளை மதிப்பாய்வு செய்பவர்கள் தேவையான மாற்றங்களைச் செய்யக் கோரினால் அதற்கு பதிலளிக்கவும், தேவையான மாற்றங்களைச் செய்யவும் தயாராக இருத்தல் வேண்டும்.
படி 2: கட்டுரையை பரிந்துரைக்கவும்
[தொகு]- கட்டுரையின் பேச்சு பக்கத்தின் மேல் {{sub: GAN|subtopic =}} எனும் வார்ப்புருவினை இடவும்.
- |
|subtopic=
= என்பதில் பின்வரும் துணைப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்க்கவும்ஃ- இசை, உணவு மற்றும் பானம் கலை மற்றும் கட்டிடக்கலை · கணினி மற்றும் பொறியியல் · போக்குவரத்து · புவியியல் · இடங்கள் · உலக வரலாறு · அரசவை, பிரபுக்கள் மற்றும் வாரிசுரிமைகள் · மொழி மற்றும் இலக்கியம் • கணிதம் மற்றும் கணிதவியலாளர்கள் • திரைப்படம்'.' · தொலைக்காட்சி · ஊடகம் மற்றும் நாடகம் • பாடல் தொகுதி • பாடல்கள் • இசை • உயிரியல் மற்றும் மருத்துவம் • வேதியியல் மற்றும் வேதிப் பொருட்கள் • புவி அறிவியல் • இயற்பியல் மற்றும் வானியல் • தத்துவம் மற்றும் மதம் • கலாச்சாரம், சமூகவியல் மற்றும் உளவியல் • கல்வி • பொருளாதாரம் மற்றும் வணிகம் • சட்டம் • பத்திரிகைகள் மற்றும் அச்சு இதழியல் • அரசியல் • கால்பந்து • விளையாட்டு · பொழுதுபோக்கு
- இது ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளின் கீழ் பொருந்தினால், மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். மேலே உள்ள எந்த வகையிலும் இது பொருந்தவில்லை என்றால், புலத்தை காலியாக விடுங்கள். அவை மற்றவை பிரிவில் வைக்கப்படும்.
- பக்கத்தைச் சேமிக்கவும். கட்டுரை மதிப்பாய்வு செய்யத் தயாராக உள்ளது என்பதைக் குறிக்க தானியங்கி ஓர் அறிவிப்பினை இடும்.
படி 3: காத்திருங்கள்
[தொகு]முன்மொழிவின் தேக்க அளவைப் பொறுத்து, பயனர்கள் மதிப்பாய்வை எடுப்பதற்கு பல மாதங்கள் தாமதமாகலாம். மாறாக, அதற்கு சில நாட்கள் மட்டும் ஆகலாம். மதிப்பாய்வு பக்கத்தை நீங்களே தொடங்க வேண்டாம், ஏனெனில் அது ஏற்கனவே மதிப்பாய்வில் உள்ளது என்று மற்ற பயனர்கள் நம்புவதற்கு வழிவகுக்கும்.
மதிப்பாய்வாளருக்கு ஒரு குறிப்பை இடுதல் : மதிப்பாய்வு தொடர்பான குறிப்பை வெளியிட, {{GA nominee}} |note=
என்பதில் நீங்கள் ஏதேனும் தகவல்களை இடலாம்.. எடுத்துக்காட்டாக: {{GA nominee|...|note=உங்களது கருத்துக்களுக்கு அடுத்தவாரம் வரை என்னால் விடையளிக்க இயலாது~~~~}}
. பக்கத்தை சேமிக்கவும். குறிப்பைக் காட்ட, GA பரிந்துரைகள் பக்கத்தில் ஒரு தானியங்கி பரிந்துரையைப் புதுப்பிக்கும்.
முன்மொழிவினைத் திரும்பப் பெறுதல் : பரிசீலனை தொடங்கும் முன் பரிந்துரையை திரும்பப் பெற, கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலிருந்து {{GA nominee}} வார்ப்புருவை அகற்றவும். பரிசீலனை தொடங்கிய பிறகு, முன்மொழிவைத் திரும்பப் பெற, மதிப்பாய்வாளருக்குத் தெரியப்படுத்தவும்; மதிப்பாய்வாளர் அதனை தகுதிநீக்கம் செய்வார்.
படி 4: மதிப்பாய்வின் போது என்ன செய்ய வேண்டும்
[தொகு]முன்மொழியப்பட்ட கட்டுரையினை மேம்படுத்தக்கோரும் மதிப்பாய்வாளரின் கேள்விகளுக்கு உரிய நேரத்தில் முன்மொழிபவர் பதிலளிக்க வேண்டும். உங்களால் இயலவில்லை எனில் மற்ற பயனர் ஒருவர் பதிலளிக்க வேண்டும். மற்ற பயனர்களும் இதில் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம், தேவையான திருத்தங்களைச் செய்யலாம். ஆனால், முதல் மதிப்பாய்வாளர் எடுக்கும் முடிவே இறுதியானது. மதிப்பாய்வு செய்யப்படுவதற்கான காலம் கட்டுரையினைப் பொறுத்து மாறுபடும். சுட்டிக்காட்டப்பட்ட பிழைகளைக் களைவதற்காக 7 நாட்கள் இந்தப் பரிந்துரையினை நிறுத்தி வைக்கலாம் (மதிப்பாய்வு செய்பவர்கள் விரும்பினால், நேர வரம்பை குறைக்கலாம்/நீட்டிக்கலாம்). ஒரு மதிப்பாய்வு நிறுத்தப்பட்டால் அல்லது நல்ல கட்டுரையின் அளவுகோல்களை விளக்குவதில் கருத்து வேறுபாடு இருந்தால், அந்தப் பரிந்துரையினை தகுதிநீக்கம் செய்யது மீண்டும் குறைகளைக் களைந்த பிறகு முன்மொழியச் செய்யலாம். அல்லது, உரையாடல் பக்கத்தில் உதவி கேட்கலாம்.
படி 5: மதிப்பாய்விற்குப் பிறகு
[தொகு]மதிப்பாய்வின் முடிவில் கட்டுரையானது நல்ல கட்டுரையாக அறிவிக்கப்படலாம் அல்லது தகுதி நீக்கம் செய்யப்படலாம். தகுதி நீக்கம் செய்யப்படும் கட்டுரைகளில் மதிப்பாய்வு செய்யும் பயனரின் கருத்துக்களுக்கேற்ப சரிசெய்த பின்னர் மீண்டும் அந்தக் கட்டுரையினை முன்மொழியலாம் அல்லது அந்த முடிவு குறித்து விக்கிப்பீடியா பேச்சு:நல்ல கட்டுரைகள் முன்மொழிவுகள் பக்கத்தில் முறையிடலாம்.
கட்டுரை நல்ல கட்டுரை நிலைக்கு உயர்த்தப்பட்டிருந்தால், கட்டுரையிலிருந்து ஓர் ஆர்வமூட்டும் உண்மையை ஏழு நாட்களுக்குள் உங்களுக்குத் தெரியுமா...? பகுதியில் இடம்பெறச் செய்யலாம்.
மதிப்பாய்வு
[தொகு]படி 1: அளவுகோல்களைப் புரிந்துகொள்ளுங்கள்
[தொகு]ஒரு கட்டுரையை மதிப்பாய்வு செய்ய முடிவு செய்ததற்கு நன்றி. மதிப்பாய்வைத் தொடங்குவதற்கு முன், நல்ல கட்டுரை அளவுகோல்களை நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒரு கட்டுரை நல்ல கட்டுரை நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு இந்த தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும். நல்ல கட்டுரைகளை மதிப்பாய்வு செய்வதற்கான வழிகாட்டி மற்றும் நல்ல கட்டுரையின் அளவுகோல் எது இல்லை என்பது பற்றிய கட்டுரையைப் படிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. நடுநிலைக் கண்ணோட்டம், விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை, விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது மற்றும் குறிப்பிடத்தக்க தன்மை உள்ளிட்ட விக்கிப்பீடியா கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்வதை உறுதிசெய்க. பின்னர் நல்ல கட்டுரையின் அளவுகோல்களைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிசெய்யவும் ,உங்கள் மதிப்பாய்வின் போது உங்களுக்கு உதவ அறிவுரையாளர்கள் உள்ளனர். உங்களுக்கு மேலும் தெளிவு தேவைப்பட்டால், விக்கிப்பீடியா பேச்சு:நல்ல கட்டுரைகள் முன்மொழிவுகள் பக்கத்தில் ஒரு கோரிக்கை வைக்கவும்.
படி 2: மதிப்பாய்வைத் தொடங்குதல்
[தொகு]மதிப்பாய்வு செய்யும் பயனர் கண்டிப்பாக ,
- பதிவுசெய்யப்பட்ட பயனராக இருங்கள் - நீங்கள் உள்நுழைந்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- மதிப்பாய்விற்கு முன் முன்மொழிந்தவராகவோ அல்லது குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கவோ கூடாது. நீங்கள் முன்மொழிந்த கட்டுரைகளை நீங்களே மதிப்பாய்வு செய்யக் கூடாது.
- நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் மதிப்பாய்வைத் தொடங்கினால், அதை சரியான நேரத்தில் முடிக்க உறுதியளிக்கிறீர்கள். பாதியில் நிறுத்தாதீர்கள். ஒரு நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகளை மட்டும் மதிப்பாய்வு செய்து, ஏழு நாட்களில் உங்கள் மதிப்பாய்வை முடிக்கத் திட்டமிடுங்கள்.
- நீங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் விக்கிப்பீடியா:நல்ல கட்டுரைகள் முன்மொழிவுகள் பக்கத்திலிருந்து ஒரு கட்டுரையைத் தேர்வு செய்யவும். வேறு யாராவது மதிப்பாய்வைத் தொடங்கியிருந்தால், மதிப்பாய்வுப் பக்கத்தில் நீங்கள் கருத்துகளைச் சேர்க்கலாம், ஆனால் மதிப்பாய்வை முதல் மதிப்பாய்வாளரால் தான் முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.
- முன்மொழிவுகள் பக்கத்தில் அல்லது கட்டுரை பேச்சுப் பக்கத்தின் மேலே தோன்றும் start review இணைப்பைப் பின்தொடர்ந்து மதிப்பாய்வைத் தொடங்கவும். புதிய மதிப்பாய்வுப் பக்கம் உருவாக்கப்படும். இந்த மதிப்பாய்வுப் பக்கத்தின் கீழே தொடக்கக் கருத்துகள், ஆரம்ப மதிப்பாய்வு அல்லது இதில் ஒன்றை நீங்கள் சேர்க்கலாம்.
- பக்கத்தை சேமிக்கவும். கட்டுரை மதிப்பாய்வு செய்யப்படுவதைக் குறிக்க முன்மொழிவுகள் பக்கத்தில் ஒரு தானியங்கிப் பரிந்துரையைப் புதுப்பிக்கும், மேலும் கட்டுரை மதிப்பாய்வு செய்யப்படுவதை பரிந்துரைப்பவருக்குத் தெரியப்படுத்த en:Template:GANotice ஐப் பயன்படுத்தும்.