விக்கிப்பீடியா:சென்னை விக்கி பட்டறை 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை விக்கி பட்டறை (Chennai Wikicamp) விக்கி தொழில் நுட்பத்தை மையப்படுத்தி பெப்ரவரி 25, 2007 இல், சென்னை Tidel Park இல் நடைபெற்ற ஒரு பட்டறை ஆகும். இது தன்னார்வலர்களாலும், த நாலட்ஜ் பவுண்டேழ்சன் (The Knowledge Foundation) என்னும் நிறுவனத்தாலும் அகில இந்திய நோக்கில் ஆங்கிலத்தில் இடம்பெற்ற ஒரு பட்டறை ஆகும். இந்த பட்டறை "அன்கான்பெரன்ஸ்" ("unconference") முறையில் ஒழுங்கமைக்கப்பட்டது.

சென்னை விக்கிப் பட்டறைக்கு விக்கிபீடியாவை ஆரம்பித்தவரில் ஒருவரான ஜிம்போ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தமிழ் விக்கிபீடியாவும் சென்னை விக்கி பட்டறையும்[தொகு]

இந்த நிகழ்வுக்கு தமிழ் விக்கிபீடியாவும் குறிப்பிடத்தக்கவாறு பங்களித்தது. தமிழ் விக்கிபீடியா பயனர்களான சுந்தர், கணேஸ், மஹீர் ஆகியோர் அங்கு பயற்சிகள் வழங்கியதுடன், தமிழ் விக்கிபீடியாவையும் பரந்த களங்களில் அறிமுகப்படுத்தி வைத்தனர். மேலும், தமிழ் விக்கிபீடியா சென்னை விக்கி பட்டறை தொடராக பின்வரும் அறிக்கையை வெளியிட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]