விக்கிப்பீடியா:உள்ளடக்க பொறுப்புத் துறப்புகள்
Jump to navigation
Jump to search
விக்கிப்பீடியா ஆட்சேபிக்கத்தக்க பொருந்தாத உள்ளடக்கத்தை கொண்டிருக்கலாம்
தன்னுடைய கலைக்களஞ்சியம் செயல்பாட்டில், விக்கிபீடியா பல மில்லியன் கணக்கிலான கட்டுரைகளை பரந்துபட்ட தலைப்புகளில் கொண்டிருக்கிறது. இந்த தலைப்புகளில் ஒரு சிறிய பகுதி கல்வி, அரசாங்கம், பெருநிறுவனம், பெற்றோர், மற்றும் பிற வடிகட்டி திட்டங்கள் போன்றவை தணிக்கை செய்கின்றன.
- சில விக்கிப்பீடியா கட்டுரைகள் விவரிக்கும் சொற்கள் அல்லது அதன் சொல்நடை வரம்பு மீறியாக அல்லது இழிவு படுத்துவதாக சில வாசகர்களால் கருதப்படலாம். மேலும் தகவலுக்கு விக்கிப்பீடியா: அவதூறான பொருள் காணவும்.
- விக்கிப்பீடியா கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கும் ஒலி மற்றும் ஒளிக்கோப்புகள் சில பண்பாடுகளால் காட்சிப்படுத்தக்கூடாது என தடைசெய்யப்பட்ட நபரையோ நிகழ்வையோ சித்தரிக்கக் கூடும்.
- விக்கிப்பீடியால் பல வேறுபட்ட படிமங்கள் உள்ளன. இவற்றுள் ஏதாவது, சில வாசகர்களால் ஏற்கமுடியாத அல்லது ஆட்சேபத்திற்குரியதாக கருதப்படலாம். உதாரணமாக, சில கட்டுரைகள் வன்முறை, மனித உடற்கூறியல், அல்லது பாலியல் வன்முறை தொடர்பான வரைகலை சித்திரங்கள் கொண்டிருக்கின்றன.