விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்/சந்திப்பு-02122017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலிப் பதிவு[தொகு]

இடம் திகதி[தொகு]

  • சனிக்கிழமை டிசம்பர் 2, 2017
  • இலங்கை நேரம் பிப 5:30
  • ஸ்கைப்

நிகழ்சி நிரல்[தொகு]

  • திருகோணமலை பட்டறை பின்னூட்டம்
  • திருகோணமலை பட்டறை பங்களிப்பாளர்கள் followup
  • தும்புக் கலை - எடுத்துக்காட்டு உருவாக்கம்
  • விக்கி, ஆவணகப் பயிற்சிகள்
  • மலையக களப் பணி ஒருங்கிணைப்பு
  • மட்டக்களப்பு பட்டறை

பங்கேற்பாளர்கள்[தொகு]

  • தமிழினி
  • லுணுகலை சிறீ
  • ஜெஜபிரசாந்
  • துசியந்தன்
  • விஜயகாந்தன்
  • தனா
  • இந்திரச்செல்வன்
  • பிரசாத்
  • ரமணேஸ்
  • நற்கீரன்
  • துலாஞ்சன்
  • கோபி

Actions Items[தொகு]

  • ஆவணகத்தில் பதிவேற்ற ஈடுபாடு உள்ளவர்களின் விபரங்களை அனுப்பல் - பிரசாந்/துசியந்தன்
  • தும்புத் தொழில் கட்டுரை பதிவேற்றம் - பிரசாந்
  • மலையக விக்கிப் பயிற்சி/களப் பணி முயற்சிகள் - லுணுகலை சிறீ/தனா/ஜெஜபிரசாந்/விஜயகாந்தன்
  • சிலம்பம் பார்வதிசிறீ அவர்களை துசியந்தனுக்கு அறிமுகம் செய்தல் - நற்கீரன்
  • திருகோணமலை களப் பணிகளுக்கான வாய்ப்புக்களை ஆரய்தல் - துசியந்தன்

குறிப்புகள்[தொகு]

திருகோணமலைப் பட்டறை[தொகு]

  • துசியந்தன் - திருகோணமலைப் பட்டறையில் மாணவர்கள், ஆய்வாளர்கள், மருத்துவர்கள், ஆவணப்பதிவாளர்கள் உட்பட பல்வகையினர் கலந்து கொண்டர். 25 பேர் வரையில் கலந்து கொண்டார்கள். ஆவணப்படுத்தலில் ஈடுபாடு உள்ள ஒரு நல்ல அணி ஒன்றை இந்தப் பட்டறை கண்டைய உதவி உள்ளது. குறிப்பாக மூன்று மாணவர்கள் ஆவணப்படுத்தலில் தற்போது ஈடுபடுவர்கள்.
  • துசியந்தன் - விக்கிப்பீடியாவில் பதிவேற்றக் கூடிய கட்டுரைகளை அடையாளம் கண்டு வந்தால் பட்டறை மேலும் சிறப்பாக இருந்திருக்கும். விக்கியில் உள்நுழைந்து பார்க்கவே நேரம் சென்று விடுகிறது. விக்கியில் தொகுத்தல் தொடர்பாக மேலதிக பயிற்சிகள் தேவைப்படுகின்றன.
  • பிரசாத் - மழை காரணமாக பங்களிப்பாளர்கள் தொகை சற்றுக் குறைவாகவே இருந்தது. ஆனால் பங்கெடுத்தவர்கள் ஆவணப்படுத்தலில் இயல்பான ஆர்வம் கொண்டவர்கள். பட்டறையின் முடிவில் நாம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டோம். அதனூடாக பங்கேற்பாளர்கள் பல்வேறு ஈடுபாடுகளைக் கண்டைய முடிந்தது. இதை பட்டறையின் தொடக்கத்தில் விரிவாகச் செய்து இருக்கலாம்.
  • நற்கீரன் - பட்டறை சிறப்பாக நடைபெற்றுவுள்ளது. இது தொடர்பான சில பின்தொடர்களைச் செய்வோம். இந்தப் பட்டறை தொடர்பாக தும்புக் கலை எடுத்துக்காட்டை உருவாக்கி இருந்தோம். அது தொடர்பான இணைப்புக்களைப் பகிர்ந்துள்ளேன். திருகோணமலைப் பட்டறையை ஒட்டி சில homework ஐ நாம் செய்துமுடித்துள்ளோம்.
  • நற்கீரன் - வாய்மொழி வரலாற்றை அடிப்படையாக் கொண்டே தும்புக்கலை பற்றிய விபரங்களைத் தொகுக்க கூடியதாக இருந்தது.

பயிற்சிகள்[தொகு]

  • லுணுகலை சிறீ - டிசம்பரில் ஒரு சிறிய பயிற்சி ஒன்றை எனது வீட்டிலேயே செய்துகொள்ளலாம். சஞ்சீவி சிவகுமார் வரக் கூடியதாக இருந்தால் நாம் சிறிய பாதீட்டுடன் ஒழுங்கமைக்கலாம்.
  • தனா - கட்டுரைகள், படங்களை அன்றே பதிவேற்றுவது மாதிரி பயிற்சியை வடிவமைத்தால் நன்று.
  • நற்கீரன் - படங்களை பதிவேற்றும் போது நாம் காப்புரிமைகள் தொடர்பாக அறிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும். நாம் எடுத்த படங்களை கட்டற்ற உரிமத்தில் wizard ஐப் பயன்படுத்தி பதிவேற்றுவது இலகு.
  • ஜெயபிரசாந் - whatsapp குழுவில் திட்டமிடலை மேற்கொள்ளலாம். whatapp குழு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.
  • திகதியை தீர்மானித்து whatsapp குழுவில் திட்டமிடலை மேற்கொள்ளலாம்.
  • நற்கீரன்/விஜயகாந்தன் - மலையகத் தலைப்புகள் பட்டியலை விரிவாக்கிப் பயன்படுத்தலாம்.

களப் பணிகள்[தொகு]

  • நற்கீரன் - குறிப்பான ஒரு தொழிற்கலையை தேர்தெடுத்து கள ஆவணப்படுத்தல் செய்வதற்கான வாய்ப்புக்கள் எப்படி உள்ளன?
  • விஜயகாந்தன் - தும்புத் தொழிற்கலை போன்று பல கலைகள் மலையகத்தில் உள்ளன. அவற்றை ஆவணப்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன.
  • கோபி - மண்பாண்டக் கலையை யாழ்ப்பாணத்தில் ஆவணப்படுத்தக் கூடியதாக இருக்கும். பனையோலை தொடர்பான கலைகளையும் யாழ்ப்பாணத்தில் செய்வது சாத்தியம். மன்னார் வன்னியில் பட்டறைகளை ஒழுங்கு இந்தச் செயற்திட்டத்தை முன்னெடுக்க உதவும்.
  • ரமணேஸ் - மலையகத்தில் தப்பு, கூத்து போன்ற கலைகளின் பயன்படும் இசைக் கருவிகள், ஒப்பனைப் பொருட்கள் மற்றும் கலைப் பொருட்கள் உற்ற்பத்தி தொடர்பான ஆவணப்படுத்தலையும் இந்தச் செயற்திட்டம் ஊடாக முன்னெடுக்க முடியும். இதற்கான வாய்ப்பு உள்ளதா?
  • விஜயகாந்தன் - இந்தக் கலைகள் ஓரளவு இன்னும் இருக்கும்.
  • தனா - ஓரளவு வயது வந்தவர்கள்தான் இவற்றை செய்வதில் ஈடுபடுகிறார்கள்.
  • காமன் கூத்தைப் பொறுத்த வரையில் கலைப் பொருட்கள் ஆக்கப்படுகின்றன. ஏற்கனவே உள்ளவை பயன்படுத்தப்படுகின்றன.
  • தனா - கொட்டக்கலையில் நடந்த மலையக வரலாறும் வாழ்வியலும் கண்காட்சியில் நாம் ஆவணப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் பங்கெடுத்த சிலரும் ஆவணப்படுத்தல் பணியில் ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர்.

ஆவணப்படுத்தலில் உள்ள சவால்கள்[தொகு]

  • விஜயகாந்தன் - நாம் ரெம்ப பிரேயோயத்தம் எடுத்தே கலைப் பொருட்களை ஆவணப்படுத்த வேண்டி இருக்கும். நிறையச் சவால்கள் உள்ளன.
  • நற்கீரன் - நிச்சியமாக சவால்கள் உள்ளன. நாம் தொழிற்கலைஞர்களோடு இணைப்பை ஏற்படுத்தி, முக்கியத்துவத்தை உணர்த்தி செய்ய வேண்டும்.
  • ரமணேஸ் - இரண்டு அணுகுமுறைகளைப் பார்க்கலாம். அங்குள்ளவர்களை goodwill ambassadors ஆக உள்வாங்கிச் செய்வது. அல்லது வெளியே இருந்து ஈடுபாடு உள்ள ஒருவர் சென்று ஆவணப்படுத்துவது. இதில் நாம் பல்வேறு கருத்துநிலைகளை கருத்தில் எடுத்துக் கொண்டு, சரியான வியூகங்களை அமைத்து செயற்பட வேண்டி உள்ளது. இல்லாவிட்டால் நாம் பல அறிவுத்தளங்களை இழந்து விடுவோம்.
  • விஜயகாந்தன் - நான் பல காலமாக கூத்து மீளூருவாக்கம் தொடர்பாக கலாநிதி. ஜெயசங்கருடன் இனைந்து பணியாற்றி உள்ளேன். ஆற்றுகையின் வடிவத்தை மாற்றுவது என்பது கலையம்சத்தை மாற்றுகிறது என்பது பொதுவான கருத்து உள்ளது. இன்று வரைக்கும் அடுத்தட்டு பாமர மக்கள்தான் கூத்துக் கலையை பேணி வைத்திருக்கிறார்கள். கல்வியறிவு பெரிதும் இல்லாத, உழைப்பை மட்டும் முதன்மை மூலதனாக வைத்திருக்கும் உழைக்கும் மக்களிடமே கூத்து உயர் வாழ்கிறது. இதில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாகவோ அல்லது இது பற்றிய மீளாய்வு தொடர்பாகவோ அல்லது இதை நவீன மேடைக்கு ஏற்ப மாற்றுது தொடர்பாக செயற்படுவது யார் எனில் படித்த மத்திய தர வர்க்கம். அவர்கள் நேரடியாக கலைக்கு சொந்தக்காரர்களுடன் தொடர்பில இல்லை. அவர்கள் அதை விட்டு விலகி வேறு ஒரு இடத்தில் இருக்கிறார்கள். அதைப் பார்வைப் பொருளாக மட்டும் வைத்திருக்கிற ஒரு மத்தியதர வர்க்கமே கலையம்சங்களை பேசுபொருளாக்கி வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாக்கி உள்ளார்கள். உதாரணத்துக்கு காமன் கூத்தை செம்மொழி மாநாட்டில் மேடை நாடக வடிவில் மாற்றிய கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. நாம் ஆவணப்படுத்த எங்கே போக வேண்டும் என்றால், நாம் அடித்தட்ட மக்களிடம் போக வேண்டும். எங்கே உண்மையாக கலையம்சம் உள்ளதோ அங்கே போக வேண்டும்.
  • ஜெயபிரசாந் - அவர் சொல்வதில் நிஜாயம் இருக்கு. செம்மொழி மாநாட்டில் கூத்தை மேடை வடிவில் மாற்றியது தொடர்பாக கடுமையான விர்சமங்கள் முன்வைக்கப்பட்டது நவீனப்படுத்தல் ஊடாக அடித்தட்ட மக்களிடம் இருந்து அந்தக் கலையை பறிச்சு எடுக்கிற ஒரு தொனி தொரிகிறது. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • நற்கீரன் - மேற்குறிப்பிட்ட விடயங்களை கவனத்தில் எடுத்து, மக்களோடு சேர்ந்து ஆவணப்படுத்தல் ஊடாக நாம் இந்தச் செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
  • துசியந்தன் - யாழ்ப்பாணத்தில் லொரிக்கு இக்கு body அடிக்கிறது முன்னர் செய்யப்பட்டது என்று அறிய முடிகிறது. அண்மைக் காலத்தில் இருந்து இந்தத் தொழில்நுட்பம் இப்போது இல்லை. ஆவணப்படுத்தலில் மாற்றுவது என்று இல்லை. எப்படி இருந்தது என்பது என்பதை ஆவணப்படுத்தல்தான் நாம் செய்வது. ஆவணப்படுத்தல் ஊடாக கலை மாறாது. கலை தானாக காலத்துக்கு காலம் மாறுவதுண்டு. 25 ஆண்டுகளுக்கு முன்னர் தம்பூர் பகுதில் இருந்த ஒரு கூத்து இப்பொது இல்லை.
  • துசியந்தன் - அண்மைக் காலமாக சிலம்பு ஆவணப்படுத்தலில் ஈடுபட்டு வருகிறேன். சுமார் நான்கு ஆண்டு காலமாக இதில் இயங்கி ஓரளவு ஆவணப்படுத்தல் செய்யக் கூடியதாக இருக்கிறது.

திருகோணமலை தொழிற்கலைகள்[தொகு]

  • துசியந்தன் - திருகோணமலையில் பல கலைகள் இப்போழ்து இல்லாமல் போய்விட்டன. பிரம்புக் கலை, மட்பாண்டக் கலைகள், சிலைகள் செய்வது போன்றவை தற்போது இல்லாமல் போய்விட்டன. செங்கல் சூழை தொடர்ச்சியாக இருக்கின்றது. களிமண் வளங்க் கூடியதாக இருப்பதால் செங்கல் தொழில் செய்யக் கூடியதாக இருக்கிறது. 85 ஆம் இடம்பெயர்வுக்குப் பின்பு மட்பாண்டக் கலை தற்போது இல்லை.
  • நற்கீரன் - திருகோணமலைப் பதிவுகளை பிற பிரதேசங்களோடு இணைத்துப் பதிவு செய்யலாம்.
  • துசியந்தன் - ஆவணப்படுத்தல் ஊடாக தொழிலையே மீண்டும் தொடங்க உதவலாம். சூழலியல் விழுப்புணர்வு காரணமாக மரபுத் தொழில்கள் தொடர்பாக ஈடுபாடு உள்ளது.
  • நற்கீரன் - இந்த மாதிரியான ஆவணப்படுத்தல் அந்த மாதிரியான நோக்கங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.
  • துசியந்தன் - அப்படியான தொழில்களில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கு இந்த ஆவணங்கள் உதவியாக இருக்கும்.