விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 22, 2012
Appearance
நாசாவின் விண்ணோடம் என்பது ஐக்கிய அமெரிக்க அரசினால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பப் பயன்படுத்தப்படும் விண்கலம். இது அதிகாரபூர்வமாக ”விண்வெளி போக்குவரத்து முறை” என அழைக்கப்படுகிறது. கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் மற்றும் எண்டெவர் என கட்டப்பட்ட ஐந்து விண்ணோடங்களில் சேலஞ்சர் மற்றும் கொலம்பியா விண்வெளி பயணத்தின் போது விபத்துக்குள்ளாகி அழிந்து விட்டன. பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து அட்லாண்டிஸ் விலகிச் செல்கையில் எடுக்கப்பட்ட படம் இடப்புறம் உள்ளது. |