விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 13, 2011
Appearance
இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் (1715–1777) பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு ஃபிளெமியர். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிக நிலையொன்றை இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள குளச்சலில் நிறுவுவதற்காக அக்கம்பனியின் கடற்படைத் தளபதியாக அனுப்பப்பட்ட போது 1741 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர்ப் படைகளுடன் ஏற்பட்ட போரில் தோல்வியடைந்து போர்க் கைதி ஆனார். ஆயினும், பின்னர் இவர் திருவிதாங்கூர்ப் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். மன்னன் மார்த்தாண்ட வர்மரின் கீழிருந்த அந்நாட்டின் பிற்காலப் போர் வெற்றிகளுக்கு இவர் பெரிதும் துணை புரிந்ததாகக் கருதப்படுகிறது. குளச்சல் போரின்பின் டி லனோய் சரணடைவதைப் படம் காட்டுகிறது. |