விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 12, 2006
Appearance
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா அர்ஜென்டினாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு பொதுவுடமைப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி என பன்முகங்களைக்கொண்டவர். அல்பர்டோ கொர்டோ எடுத்த இப்புகைப்படம் உலகெங்கும் பரவலாக அறியப்பட்ட ஒன்று. இப்படம் உலகின் மிகவும் புகழ்பெற்ற புகைப்படம் என்றும் இருபதாம் நூற்றாண்டின் சின்னங்களில் ஒன்று என்றும் மேரிலேண்ட் கலைக்கல்லூரி கருதுகிறது. |