விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜனவரி 4, 2009
Appearance
பேரடை என்றும் நாள்மீன்பேரடை (Galaxy) என்றும் குறிக்கப்பெறுவது பெரும் நாள்மீன் கூட்டம் ஆகும். ஒரு சராசரி பேரடையில் 10 மில்லியன் முதல் ஒரு டிரில்லியன் (107 முதல் 1012) வரையான எண்ணிக்கையில் விண்மீன்கள் இருக்கும். இன்று கணக்கிடக்கூடிய பேரடைகள் நூறு பில்லியனுக்கும் (1011) மேல் இருக்கும். ஒவ்வொரு நாள்மீன் பேரடையும் சில ஆயிரம் முதல் பன்னூறாயிரம் ஒளியாண்டுகள் அளவு விட்டம் கொண்டிருக்கும். பேரடைகளுக்கு இடையேயான வெளியில் மிககுறைவான அளவில்தான் அணுப்பொருள்கள் இருக்கும். ஒரு கன மீட்டரில் ஓர் அணு என்னும் விதமாக மிக அருகியே விண்துகள்கள் இருக்கும். படத்தில் அன்டென்னே பேரடை காட்டப்பட்டுள்ளது. |