விக்கிப்பீடியாவில் விசமத்தொகுப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியா யாவராலும் தொகுக்கக்கூடிய தளம் என்பதால் விசமத் தொகுப்புகள் இடம்பெறுகின்றன. தேவையற்ற நகைச்சுவை, தனிநபர் தாக்குதல், பொய்யான தகவல்கள் ஆகியன விசமத் தொகுப்புகளாகக் கருதப்படும். விக்கிப்பீடியா தொடங்கப்பட்டதிலிருந்தே பல விசமத் தொகுப்புகள், குறிப்பாக பரவலாக அறியப்படும் தலைப்புகளில் நடந்திருக்கின்றன. இவ்வாறு செய்பவர்களை அணுக்கர்கள் எச்சரித்துப் பின் தடை செய்வர். பயனர்கள் பக்கங்களை கவனிப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்வதன் மூலமும், அண்மைய மாற்றங்களைக் கண்டும் இத்தகைய விசமத் தொகுப்புகளில் இருந்து கட்டுரைகளை மீளமைக்கலாம். அதிக விசமத் தொகுப்புகளைப் பெறும் கட்டுரைகள் காப்பு செய்யப்படும். இவற்றை அணுக்கர்களே தொகுக்க முடியும். இது விக்கிப்பீடியாவின் நம்பகத் தன்மையை சோதிக்கும் காரணிகளில் ஒன்று. பல முக்கிய நபர்களை இறந்ததாகவும், கருத்து வேறுபாடு கொண்ட தலைப்புகளில் தன் பக்க வாதத்தை முன்னிறுத்தியும் செய்யப்படும் விசமத் தொகுப்புகள் அதிகம் காணப்படுகின்றன.