விகடகவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விகடகவி
இயக்கம்ஜி. கிருஷ்ணன் பாலசுப்பிரமணி
தயாரிப்புசி. சரவணன்
டி. ஆர். சேவுகன்
இசைராடன்
நடிப்புசத்தீஷ்
அமலா பால்
ஒளிப்பதிவுமுபூ ஆனந்த்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்ஏபிசி ஸ்டுடியோஸ்
வெளியீடு22 ஏப்ரல் 2011
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விகடகவி (Vikadakavi) என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்ததை முன்னாள் ஒலிப் பொறியாளரான ஜி. கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.[1] இப்படத்தில் அறிமுக நடிகர் சதீஷ் மற்றும் அமலா பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் 2011 ஏப்ரல் 22 அன்று வெளியானது.[2] இந்த படம் மிகவும் தாமதமாக வெளியிடப்பட்டது. மேலும் இது முன்னணி நடிகை அமலா பாலின் முதல் படமாகும்.[3][4][5] படத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அவர் மைனா மற்றும் வீரசேகரன் உள்ளிட்ட பிற படங்களில் பணியாற்றினார்.[4]

கதை[தொகு]

விகடகவி ஐந்து நண்பர்களின் நகைச்சுவைக் கதை, அவர்கள் கிராமவாசிகளுக்கு இம்சையைக் கொடுக்கிறார்கள்.

நடிப்பு[தொகு]

  • சதிஷ் வினோத்
  • அமலா பால் கவிதாவாக
  • விருச்சிககாந்த் கருணாவாக
  • பேச்சி டயானாவாக
  • இர்ஷாத் விருமாண்டியாக

தயாரிப்பு[தொகு]

அமலா பால் கல்லூரியில் பயின்றபோது இந்தப் படத்தில் பணியாற்றினார்.[6]

வரவேற்பு[தொகு]

தி இந்து எழுதிய விமர்சனத்தில், " குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட விகடகவி, இரசிகர்களைக் கவர்வதற்கு கதாபாத்திரம், உரையாடல், திரைக்கதை ஆகியவற்றை பெரிதும் சார்ந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இவற்றைக் கையாண்ட கிருஷ்ணன் ஏமாற்றவில்லை ".[7] நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதிய விமர்சனத்தில் "விகடகவியில் புகழ்ந்து பேசுவதற்கு பெரியதாக ஒன்றும் இல்லை, ஆனால் நிச்சயமாக ஒரு அறிமுக இயக்குநரின் எதிர்பார்ப்பை கடந்து உள்ளது" என்று எழுதியது.[8] முன்னணி நடிகர்களின் நடிப்பை பாராட்டிய தினமலர், பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவை விமர்சித்தது.[9] குங்குமம் கதையைப் பாராட்டியது.[10]

குறிப்புகள்[தொகு]

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விகடகவி&oldid=3709829" இருந்து மீள்விக்கப்பட்டது