உள்ளடக்கத்துக்குச் செல்

வாள் நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கணத்தில் வாள் நிலை என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். போருக்குப் புறப்பட எண்ணும் மன்னன், ஒரு நல்ல நேரம் பார்த்துத் தனது வெண்கொற்றக்குடையையோ தனது வாளையோ யானையின் மீது ஏற்றி வடதிசை நோக்கி அனுப்புவான். இது புறவீடு செய்தல் எனப்படுகிறது. இவ்வாறு வாளைப் புறவீடு செய்வதைக் கருப்பொருளாகக் கொண்ட துறை "குடை நிலை" எனப்படும். இதை ஒரு துறையாகத் தொல்காப்பியம் கூறவில்லை. எனினும் புறப்பொருள் வெண்பாமாலையில் இதுவும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு உள்ளது.

இதனை விளக்க, பகையரசர்கள் மேல் படையெடுக்க விரும்பும் மன்னன் தன் வெற்றி பொருந்திய வாளைப் புறவீடு செய்தல்[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

செற்றார்மேல் செலவுஅமர்ந்து
செற்றார்மேல் செலவுஅமர்ந்து

எடுத்துக்காட்டு

[தொகு]
அறிந்தவர் ஆய்ந்தநாள் ஆழித்தேர் மன்னன்
எறிந்தில கொள்வாள் இயக்கம் - அறிந்திகலிப்
பின்பகலே யன்றியும் பேணார் அகநாட்டு
நன்பகலும் கூகை நகும்
- புறப்பொருள் வெண்பாமாலை 38.

குறிப்பு

[தொகு]
  1. இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 65, 66

உசாத்துணைகள்

[தொகு]
  • இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
  • கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாள்_நிலை&oldid=1551249" இலிருந்து மீள்விக்கப்பட்டது