உள்ளடக்கத்துக்குச் செல்

வால்டர் மிகுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமில் பிரெட்ரிக் அகத்து வால்டர்
பிறப்பு(1863-11-04)நவம்பர் 4, 1863
இறப்புசூன் 23, 1938(1938-06-23) (அகவை 74)
தேசியம்ஜெர்மனி
துறைதாவரவியல்
பணியிடங்கள்கார்ல்ஸ்ரூ தொழில்நுட்ப நிறுவனம்

வால்டர் மிகுலா (Walter Migula, 23 சூன் 1938 – 4 நவம்பர் 1863) ஒரு செருமானியத் தாவரவியலாளர் ஆவார். இவர் புருசியாவில் உள்ள சைரோவா கிராமத்தில் பிறந்தார் (தற்போது இது போலந்து நாட்டுப் பகுதி). இவர் 1938 ஆண்டு செருமனியில், ஐசனா என்ற நகரில் இயற்கை எய்தினார்.

1890 ஆம் ஆண்டு முதல் இவர் கார்ல்ஸ்ரூ தொழில்நுட்ப நிறுவனத்தின் தாவரவியல் துறையில் பல ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றினார். மேலும் அந்த நிறுவனத்தில் உணவு ஆராய்ச்சி, தாவரவியல் ஆராய்ச்சி மற்றும் பாக்டீரியா ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார்.இவர் ஐசனா நகரில் தாவரவியல் ஆராய்ச்சி கல்வியியல் நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Flora von Deutschland, Österreich und der Schweiz". Archived from the original on 2016-10-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்டர்_மிகுலா&oldid=3860995" இலிருந்து மீள்விக்கப்பட்டது