வார்ப்புரு பேச்சு:Subash

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வார்ப்புரு நன்றாக இருக்கிறது. ஆனால், இந்த வார்ப்புருவை எதற்குப் பயன்படுத்தலாம் என நினைக்கிறீர்கள்? இந்த வார்ப்புரு பயன்படுத்தப்படும் நிலையில் வேறு சில தலைவர்களின் படங்களுடன் பல வார்ப்புருக்கள் பதிவேற்றம் செய்யப்படலாம். தேசத் தலைவர்கள் மீது பற்று அனைவருக்கும் உள்ளது. ஆனால் அதில் காணப்படும் பாகுபாடுகள்...? --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:42, 4 ஆகத்து 2011 (UTC)

  • பல வார்ப்புருக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் விக்கியில் என்ன பிரச்சினை உள்ளது?
  • ஏதேனும் இருப்பின் அதை நீக்கி விடுங்கள்?
  • பயனர் பெட்டியில் எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்று நான் நினைத்திருந்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் 15:01, 6 ஆகத்து 2011 (UTC)
நம் தமிழ்நாட்டில் தேசியத் தலைவர்களைச் சாதி அடிப்படையில் பிரித்துக் கொண்டு விட்டார்கள். இதனால் இந்த வார்ப்புருவை அடிப்படையாகக் கொண்டு பல வார்ப்புருக்கள் சாதி சார்ந்த தேசியத் தலைவர்களாகக் கொண்டு உருவாக்கப்படக் கூடும். தாங்கள் இந்த வார்ப்புருவை ஏதாவது பயனுள்ள தகவலுக்காகப் பயன்படுத்துவதானால் பரவாயில்லை. இருக்கட்டும். தாங்கள் மகாத்மா காந்திக்கான வார்ப்புருவை உருவாக்கலாம். அதுவும் காந்தீயக் கொள்கையைப் பின்பற்றுபவர் என்பது போன்ற வாசகங்களுடன் இருந்தால் சிறப்பாக இருக்கும். (வேறு வாசகங்கள் வேண்டாம்) உலகம் முழுவதும் காந்தீயக் கொள்கையை விரும்பும் பலர் இருக்கிறார்கள். இதுபோன்ற வார்ப்புருக்களைச் சில பயனர்களாவது பயன்படுத்தக்கூடும். தவறாக எண்ண வேண்டாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:56, 6 ஆகத்து 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Subash&oldid=837809" இருந்து மீள்விக்கப்பட்டது