வாய்னிச் கைப்பிரதி
| வாய்னிச் கைப்பிரதி | |
|---|---|
| பெய்னக்கெ அபூர்வ புத்தகம் மற்றும் கைப்பிரதி நூலகம், யேல் பல்கலைக் கழகம் | |
வாய்னிச் கைப்பிரதியில் மடித்து வைக்கப்பட்டிருந்த பக்கம் | |
| வகை | புத்தகம் |
| தேதி | 15 ஆம் நூற்றாண்டுக்கு (1404–1438) முற்பட்டது[1][2] |
| உருவான இடம் | இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருக்கலாம்[1][2] |
| மொழி(கள்) | தெரியாது |
| எழுதியவர்(கள்) | தெரியாது |
| ஆக்கியோர் | தெரியாது |
| தொகுப்பு | தெரியாது |
| Illuminated by | தெரியாது |
| Material | மென்தோல் |
| அளவு | 23.5 கீழ் 16.2 கீழ் 5 cm (9.3 கீழ் 6.4 கீழ் 2.0 அங்) |
வாய்னிச் கைப்பிரதி (Voynich manuscript) என்பது தெரியாத எழுத்து முறையில் கைகளால் எழுதப்பட்ட, படங்களுடன் விளக்கப்பட்டுள்ள ஒரு புத்தகம். ஆய்வின் முடிவில் இந்த புத்தகம் இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் என்றும், 15 ஆம் நூற்றாண்டுக்கு (1404–1438) முற்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் எனவும் ஆரய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதற்கு 1912 இல் இந்த புத்தகத்தை வாங்கிய வில்பிரடு வாய்னிச்சின் பெயர் வைக்கப்பட்ட்டுள்ளது.[3]
இதன் சில பக்கங்கள் தொலைந்து விட்டன, ஆனால் 240 பக்கங்கள் இன்னும் இருக்கிறது. இதில் உள்ள எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டிருந்தன, மற்றும் பெரும்பாலன பக்கங்களில் வண்ணப்படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
அதன் பிறகு 2013-ஆம் ஆண்டு மான்ஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சொற்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த புத்தகத்தை ஆராய்ச்சி செய்துவிட்டு இது ஏதோ கருத்தினை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.
சில ஆராய்ச்சியாளர்கள் இது ஏதேனும் ரகசிய குறிப்புகளாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர். எது எப்படியோ இன்றளவு இந்த புத்தகத்தின் குறிப்புகள் யாருக்கும் புரியவில்லை என்பதுதான் உண்மை.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Steindl, Klaus; Sulzer, Andreas (2011). "The Voynich Code — The World's Mysterious Manuscript" (video). Archived from the original on 9 மார்ச் 2012. Retrieved 6 November 2011.
{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) - 1 2 Stolte, Daniel (10 February 2011). "Experts determine age of book 'nobody can read'". PhysOrg. Retrieved 10 February 2011.
- ↑ முகில் (5 சூன் 2019). "வாசிக்க முடியாத புத்தகம்". கட்டுரை. இந்து தமிழ். Retrieved 13 சூன் 2019.