உள்ளடக்கத்துக்குச் செல்

வானபிரஸ்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானபிரஸ்தம்
இயக்கம்ஷஜ்ஜி என்.கருன்
தயாரிப்புபியரெ அசௌலின்
சுரேஷ் பாலாஜி
காய் மரிஞனே
மோகன்லால்
கதைஷஜ்ஜி என்.கருன்
ரெகுநாத் பலெரி
பியெரி அசௌலின் (கதை)
இசைஷகிர் ஹுசைன்
நடிப்புமோகன்லால்
சுஹாசினி
மட்டனூர் சங்கர மாரெர்
குக்கு பரமேஷ்வரம்
வேன்மணி ஹரிதாஸ்
கலமண்டலம் கோபி
வேன்மணி விஷ்னு
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
ரெனாட்டோ பேட்டா
படத்தொகுப்புஏ.ஸ்ரீகர் பிரசாத்
ஜோசப் குன்வார்ச்
வெளியீடு1999
ஓட்டம்119 நிமிடங்கள்
மொழிமலையாளம்

வானபிரஸ்தம் (The Last Dance) (1999) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும்.ஷஜ்ஜி என்.கருன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன்லால்,சுஹாசினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வகை

[தொகு]

கலைப்படம்

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கேரளாவில் 1950 ஆம் ஆண்டுகளில் வாழும் குன்ஹிக்குட்டன் (மோகன்லால்) கதகளி நடனத்தின் மீதுள்ள அவாவினால் அந்தணர்கள் குடும்பத்திடம் கற்கச் செல்கின்றார். அங்கு தாழ்ந்த ஜாதியனன் என ஒதுக்கப்படும் பொழுது அங்கிருந்த நல்லவர் ஒருவரால் அரவணைக்கப்பட்டு கதகளிக் கலையினைப் பயில்கின்றார் உயர்ந்த ஜாதியனனாகத் திகழ்ந்த குன்ஹிக்குட்டனின் தந்தையார் தாழ்ந்த ஜாதிப் பெண்ணான குன்ஹிக்குட்டன் தாயாரை இரண்டாம் தாரமாக ஏற்றுக் கொண்டவராவார். தனது புதல்வனான குன்ஹிக்குட்டனை வாழ்நாள் முழுதும் ஒதுக்கி வைத்தவரும் ஆவார். ஒரு சமயம் குன்ஹிக்குட்டன் மகாபாரதக் கதையில் வரும் அர்ஜுனன் கதாபாத்திரத்தினை ஏற்று நடிக்கும் சமயம் அர்ஜுனன் மனைவியான சுபத்ரா கதாபாத்திரத்தில் உள்ளது போன்று தன்னை நினைத்துக் கொண்டு அர்ஜூனனாக நடித்த குன்ஹிக்குட்டனைக் காதலிக்கின்றார் அவ்வூர் இளவரசியான சுபத்ரா (சுகாசினி). சுபத்ரா விமான ஓட்டி ஒருவரை மணம் புரிந்தவரென்பதும் குன்ஹிக்குட்டனின் சினேகம் கிடைத்த சில நாட்களில் அவர் இறந்து விடுவதும் குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் இருவரும் காதல் கொண்டு காம லீலைகளில் ஈடுபட்டுக் குழந்தையொன்றினையும் பெற்றெடுக்கின்றனர்.குன்ஹிக்குட்டன் ஏற்கனவே ஒரு மனைவியை உடையவரென்பதும் மகள் ஒருத்தியை உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில் பிரியும் சுபத்ரா தான் அர்ஜூனன் என்ற கதாபாத்திரத்தையே காதல் கொண்டதாகவும் குன்ஹிக்குட்டனை அல்ல என்பதனையும் விளக்கிக் கூறுகின்றார்.இருவரும் பிரிந்தே வாழுகின்றனர்.கதகளி நடனத்தினை அரங்கேற்றும் பொழுது குன்ஹிக்குட்டன் கீழே விழுந்து இறக்கின்றார் இச்செய்தியை அறிந்து கொள்ளும் சுபத்ரா குன்ஹிக்குட்டன் தனக்கு இறுதியாக எழுதிய மடலில் தனது மகனைப் பற்றி விசாரித்து எழுதுகின்றார் அதன் பின்னர் சுபத்ரா மனம் நொந்து போய் மயங்கி விழுந்து மரணிக்கின்றார்.

விருதுகள்

[தொகு]

1999 AFI Fest (அமெரிக்கா)

வென்ற விருதுகள்

[தொகு]

2000 இஸ்தான்புல் சர்வதேச திரைப்பட விழா (துருக்கி)

2000 பம்பாய் சர்வதேச திரைப்படவிழா (இந்தியா)

2000 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானபிரஸ்தம்&oldid=3949166" இலிருந்து மீள்விக்கப்பட்டது