வாசுதேவன் பாஸ்கரன்
வாசுதேவன் பாஸ்கரன் | |
---|---|
பிறப்பு | 1950.ஆகஸ்ட்.17 ஆரணி |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | லயோலா கல்லூரி |
பணி | வளைத்தடிப் பந்தாட்டம் |
பட்டம் | அணித் தலைவர் |
வாசுதேவன் பாஸ்கரன் (Vasudevan Baskaran) (பிறப்பு ஆகஸ்ட் 17, 1950) ஒரு சிறந்த வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர். இவர் மாஸ்கோவில் நடந்த 1980- ஒலிம்பிக் விளையாட்டில் இந்திய தேசிய அணியின் தலைவராக விளையாடினார். இந்த அணி இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது. 1979-80 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதைப் பெற்றார்.
வாழ்க்கையும்,கல்வியும்
[தொகு]இவர் பிறந்த ஊர் ஆரணி. தந்தை வாசுதேவன் தாய் பத்மாவதி. படித்தது வெஸ்லி பள்ளி, மற்றும் லயோலா கல்லூரி
விளையாட்டு
[தொகு]11 வயதில் வளைத்தடிப் பந்தாட்டத்தை விளையாட ஆரம்பித்தார். அகில இந்திய பள்ளி அணியில் இடம்பெற்றார். கல்லூரி நாளில் பல்கலைக்கழக அணிக்காக ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயணம் செய்து இந்திய பல்கலைக்கழக அணிக்காக விளையாடினார். இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடினார். 2 உலகப் போட்டிகள், 2 ஒலிம்பிக் போட்டிகள், 2 ஆசிய போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். 1980இல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அணிக்கு தலைமை வகித்து, தங்கப் பதக்கம் பெற்று தாயகம் திரும்பினார்.
விருதுகள்
[தொகு]- பத்மஸ்ரீ விருது
- அர்ஜுணா விருது
- இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்
- இரயில்வேயின் சிறந்த விளையாட்டு வீரர்
- அகில உலக சிறந்த பயிற்சியாளர் விருது [1]
குறிப்புகள்
[தொகு]- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்37