வாசிலிகி கலோகரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாசிலிகி கலோகரா
Vassiliki Kalogera
தேசியம்கிரேக்கர்
துறைஈர்ப்பு அலைகள்
பணியிடங்கள்வடமேற்கு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்தெசலோனிகி பல்கலைக்கழகம்
விருதுகள்வானியற்பியலுக்கான தான்னீ கீனமன் பரிசு (2018)
ஏன்சு பெத்தே பரிசு (2016)
மரியா கோயப்பெர்ட் மேயர் விருது (2008)
வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது (2002)
துணைவர்பிரெடு இராசியோ
இணையதளம்
Northwestern University
குறிப்புகள்
இயக்குநர், சீரா (CIERA), வடமேற்கு பல்கலைக்கழகம்

வாசிலிகி கலோகரா (Vassiliki Kalogera) ஒரு கிரேக்க வானியற்பியலாளர் ஆவார்.[1] இவர் வடமேற்கு பலகலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவார்.[2] இவர் வானியற்பியல் பலதுறைத் தேட்ட, ஆராய்ச்சி மைய (சீரா- CIERA) இயக்குநர் ஆவார்.[3] இவர் 2015 இல் ஈர்ப்பு அலைகளை நோக்கிய லிகோ (LIGO ) கூட்டமைப்பின் உறுப்பினர் ஆவார்.

இவர் ஈர்ப்பு அலைகள், செறிந்த இரும வான்பொருள்கள் X-கதிர்கள் உமிழ்வு, நொதுமி இரும விண்மீன்களின் இணைவு ஆகிய ஆய்வுகளில் முன்னணிக் கோட்பாட்டாளர் ஆவார்.

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் 1992 இல் தெசலோனிகி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளவல் பட்டம் பெற்றார்.[4] இவர் உர்பானா சாம்பைனில் உள்ள இல்லினாயிசு பல்கலைக்கழக பட்டமேற்படிப்புப் பள்ளியில் சேர்ந்து 1997 இல் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[4] இவர் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் CfA முதுமுனைவர் ஆய்வாளராகச் சேர்ந்தார்; இவர் 2000 இல் கிளே ஆய்வுநல்கையையும் பெற்றார். இவர் 2001 இல் வடமேற்கு பல்கலைக்கழக இயற்பியல், வானியல் துறையில் புல உறுப்பினராகச் சேர்ந்தார்.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் 2002 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் ஆன்னி ஜம்ப் கெனான் வானியல் விருது வழங்கப்பட்டது. இது முதுமுனைவர் ஆய்வில் தன்னிகரற்ற சாதனை படைத்த பெண்களுக்கு வழங்கப்படுகிறது.[5]

இவர் 2008 இல் இவரது செறிந்த இரும வான்பொருள்களின் படிமர்ச்சியும் அறுதி முடிவும் சார்ந்த ஆய்வுக்காக அமெரிக்க இயற்பியல் கழகத்தின் மரியா கோயப்பர்ட் மேயர் விருது வழங்கப்பட்டது.[4]

இவருக்கு 2016 இல் செறிந்த இரும வான்பொருள்கள் உமிழும் மின்காந்த, ஈர்ப்பு அலைக் கதிர்வீச்சுகளின் ஆய்வுப் பங்களிப்புகளுக்காக அமெரிக்க இயற்பியல் கழகத்தின் ஏன்சு பெத்தே பரிசு வழங்கப்பட்டது.[6]

இவர் 2018இல் இவரது வானியற்பியல் அமைப்புகளாகிய கருந்த்ளை, நொதுமி விண்மீன்கள், வெண்குறுமீன்கள் ஆய்வுக்காக வானியற்பியலுக்கான தான்னீ கைன்மன் பரிசு வழங்கப்பட்டது.[7]

கலோகரா பெரும்பொது அளக்கைத் தொலைநோக்கி குழுமத்தில் பணிபுரிகிறார். இவர் 2018 மே மாதம் அமெரிக்கத் தேசிய அறிவியல் கலவிக்கழகத்துக்குத் தேர்வானார்.

ஆய்வும் பணியும்[தொகு]

இவர் வடமேற்கு பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் துறையில் ஈ. ஓ. ஏவன் கட்டில் பேராசிரியராக உள்ளார். இவர் வானியற்பியல் பல்துறை தேட்டம், ஆராய்ச்சி மையத்தின் (CIERA) இயக்குநராகப் பணிபுரிகிறார். இவரது அண்மைய ஆராய்ச்சி[8] கோட்பாட்டு வானியற்பியலில் லிகோ கண்டுபிடிக்கும் ஈர்ப்பு அலைகள், X-கதிர் இரும விண்மீன்களின் படிம உருவாக்கம், பெரும்பொது அளக்கைத் தொலைநோக்கி, மீவிண்மீன் வெடிப்புகளின் முன்வாயில்களை முற்கணித்தல் ஆகிய ஆய்வுகளில் ஈடுபடுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசிலிகி_கலோகரா&oldid=3588133" இருந்து மீள்விக்கப்பட்டது