வாக்கீன் கூஸ்மான்
வாக்கீன் ஆர்ச்சிபால்டோ கூஸ்மான் லொவேரா (எசுப்பானியம்: Joaquín Archivaldo Guzmán Loera) (பி. டிசம்பர் 25, 1954 அல்லது ஏப்ரல் 4, 1957) மெக்சிக்கோவின் சினலோவா மாநிலத்தை சேர்ந்த போதைக் கடத்தல் கூட்டுத் தலைவர். "எல் சாப்போ" ("குட்டையானவன்") என்று செல்லப் பெயராக அறியப்படுகிறார்.
2003இல் மெக்சிக்கோவின் மிக வெற்றிகரமான போதைக் கடத்தல் கூட்டுத் தலைவராக வந்து, இவர் பாப்லோ எஸ்கோபாரை விட பெரிய பணக்காரராக இருந்தார் என்று அமெரிக்க போதை நடைமுறை நிர்வாகம் நம்புகிறது. சுமார் 100 கோடி டாலர் சொத்து மதிப்புடன், ஃபோர்ப்ஸ் இதழின் உலகில் மிகச் செல்வந்தவர்களின் பட்டியலில் 2009இலிருந்து கூஸ்மான் சேர்ந்துள்ளார்.
ஃபெப்ரவரி 2014இல் மெக்சிக்கோவின் சினலோவா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை[தொகு]
மெக்ஸிகோவின் சினாலாவோ மாநிலத்தில் சியா மட்ரே என்ற ஊரில் பிறந்தார். எட்டாவது வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். மெக்ஸிகோவில் 1980-களில் பிரபலமாக இருந்த போதைப்பொருள் வியாபாரி மிகுல் ஏஞ்சல் பெலிக்ஸ் கலார்டோவிடம் ஆரம்பத்தில் அடியாளாகத்தான் சேர்ந்தார். 1989-ல் கலார்டோவை மெக்ஸிகோ போலீஸார் கைது செய்தபோது, எல் சாப்போ முன்நிலைக்கு வந்தார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ரண்டால் சி. ஆர்சிபால்ட்/ ஜிஞ்சர் தாம்சன் தமிழில்: சாரி (27 பிப்ரவரி). "எல் சாப்போ கதை". தி இந்து. 2 மார்ச் 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)