வள்ளி சத்யபாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வள்ளி சத்யபாமா (Vally Sathyabhama) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையாவார். 1964 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] நீண்ட தூர ஓட்டப்பந்தய விளையாட்டில் இந்தியாவின் சார்பாக இவர் பங்கேற்று விளையாடி வருகிறார். 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னை நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்று 2:38:10 நிமிடத்தில் ஓடி இந்திய தேசிய சாதனையை படைத்தார்.[2]

1991 ஆம் ஆண்டு அகில இந்திய திறந்தநிலை வெற்றியாளர் போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் வள்ளி சத்யபாமா தங்கப் பதக்கம் வென்றார். அதே ஆண்டில், அகில இந்திய மாநிலங்களுக்கு இடையேயான வெற்றியாளர் போட்டியில் 10,000 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றதன் மூலம் தனது செயல்திறனை மீண்டும் வெளிப்படுத்தினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vally Sathyabhama. Association of Road Racing Statisticians. Retrieved on 2016-01-24.
  2. "Official Website of Athletics Federation of India: NATIONAL RECORDS as on 21.3.2009". Athletics Federation of INDIA. Archived from the original on 2009-08-05. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
  3. "Indian Championships and Games". gbrathletics.com. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளி_சத்யபாமா&oldid=3775334" இலிருந்து மீள்விக்கப்பட்டது