வளைய ஆக்டீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளைய ஆக்டீனின் சாத்தியமுள்ள மாற்றியன்கள்.

வளைய ஆக்டீன் (Cyclooctene) என்பது எட்டு உறுப்புகளைக் கொண்டிருக்கும் ஒரு வளைய ஆல்கீன் சேர்மமாகும். இதை சைக்ளோ ஆக்டீன் என்றும் அழைக்கலாம். ஓர் எளிய வளைய ஆல்கீன் என்பதாலும், ஒருபக்கம் மற்றும் மாறுபக்கம் ஆகிய இரண்டு வகை மாற்றியன்களாகவும் தோன்ற முடியும் என்பதாலும் இச்சேர்மம் முக்கியத்துவம் பெறுகிறது. நிலைப்புத் தன்மை மிகுந்த ஒருபக்க மாற்றிய வடிவம் பொதுவாகத் தோன்றுகிறது. இவ்வடிவத்தின் கட்டமைப்பைப் பொறுத்தவரையில் பல்வேறு உறுதிப்பாடுகளை இது ஏற்றுக் கொண்டாலும் அதில் நிலையான உறுதிப்பாடு நாடா வடிவமாகும்;[1]. மாறுபக்க வடிவ மாற்றியமானது 8 கார்பன் உறுப்புக்கு சமமான வளையயெக்சேனின் நாற்காலி வடிவ உறுதிப்பாடு நிலைப்புத்தன்மை கொண்ட்தாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Neuenschwander, Ulrich; Hermans, Ive (2011). "The Conformations of Cyclooctene: Consequences for Epoxidation Chemistry". J. Org. Chem. 76 (24): 10236–10240. doi:10.1021/jo202176j. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைய_ஆக்டீன்&oldid=2990863" இலிருந்து மீள்விக்கப்பட்டது