வளைய ஆக்டாடையீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,5- வளைய ஆக்டாடையீன்

வளைய ஆக்டாடையீன் (Cyclooctadiene) என்பது (CH2)4(C2H2) என்ற வாய்ப்பாடால் குறிக்கப்படும் பல்வேறு வளைய டையீன்களை விவரிக்கிறது. சைக்ளோ ஆக்டாடையீன் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். ஒருபக்க மாற்றியன்கள் மட்டுமே இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. 1,2-அல்லீன், 1,3-அல்லீன், 1,4-அல்லீன், மற்றும் 1,5- அல்லீன் என்ற நான்கு வகையான மாற்றியன்கள் அறியப்படுகின்றன. 1,3-வளைய ஆக்டாடையீன் மற்றும் 1,5- வளைய ஆக்டாடையீன் என்ற இணைக்கப்பட்ட மாற்றியன்கள் பொதுவாகத் தோன்றும் வளைய ஆக்டாடையீன்களாகும். இவை இடைநிலை உலோகங்களுக்கான ஈந்தணைவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த டையீன்கள் நிறமற்றவையாகவும் எளிதில் ஆவியாகக் கூடியனவாகவும் உள்ளன [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Thomas Schiffer, Georg Oenbrink “Cyclododecatriene, Cyclooctadiene, and 4-Vinylcyclohexene” in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim.எஆசு:10.1002/14356007.a08_205

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைய_ஆக்டாடையீன்&oldid=2952634" இலிருந்து மீள்விக்கப்பட்டது