வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம் என்பது வல்வெட்டித்துறை மற்றும் ஈழம் தொடர்பான நூல்கள், வெளியீடுகள், தகவல்கள், பொருட்கள் எனப் பல்வேறு ஆவணங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் ஒர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பினை நா. நகுலசிகாமணி மற்றும் அவரது துணைவியார் உமா நகுலசிகாமணி ஆகியோர் முன்னின்று நடத்துகின்றனர். இந்த அமைப்பு ஈழத்தில் வெளிவந்த பழைய அரிய நூல்களை மீள் பதிப்புச் செய்தும் வெளியிட்டு வருகின்றது. வரலாற்று மற்றும் நூற் கண்காட்சியையும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது. இவர்களின் சேமிப்பில் தமிழர்களில் கப்பற்கலை, ஈழப் போராட்டம், தமிழர் இனப்படுகொலை பற்றிய அரிய ஆவணங்களும் உள்ளன.

நா.நகுலசிகாமணி மீள்பதிப்பு செய்து வெளியிட்ட நூல்கள்[தொகு]

பின்வரும் நூல்கள் [வல்வை நா.நகுலசிகாமணி] மீள்பதிப்புச் செய்து வெளியிட்டவையாகும். இந்நூல்கள் வல்வை வரலாற்று ஆவணக் காப்பகத்தில் பேணப்படுகின்றன.

 • கைலாயமாலை – முத்துராச கவிராசர் - 1915
 • யாழ்ப்பாண வைபவ மாலை – மாதகல் மயில்வாகனப் புலவர் - 1984
 • யாழ்ப்பாண வைபவ கௌமுதி – கல்லடி க. வேலுப்பிள்ளை – 1918
 • அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் - வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச.வயித்திலிங்கப்பிள்ளை இயற்றிய உரை – 1912 - இரண்டாம் பதிப்பு
 • கந்தவனநாதர் நான்மணிமாலையும் பதிகமும் திருப்பள்ளி எழுச்சியும் - நவாலியூர் சோமசுந்தரப் புலவர் - மலேசிய முதற்பதிப்பு – 1928
 • பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் சரித்திரம் - 100 ஆவது பிறந்த தினம் - (தமிழிலும், ஆங்கிலத்திலும்) 1954
 • தொண்டைமானாறு செல்வச் சந்நிதியும் வரலாறும் - செ. நாகலிங்கம் - 1974
 • அனைத்துலக நீதிச்சபைமுன் இலங்கைத்தமிழர் பிரச்சனை, தந்தை செல்வா சமர்ப்பித்த அறிக்கை - 1973
 • S.J.V.CHELVANAYAKAM a tribute - 1978
 • RE – OPENING OF NORTH – CEYLON PORT – 1951
 • நவரத்தினசாமி நீச்சல் வீரனின் வாழ்வுச் சரித்திரம் - காவலூர் கவிஞர் ஜி.எம். செல்வராஜ் 1954
 • அனைத்துலக நீதிச் சபை ஜெனிவா முன் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய தந்தை செல்வா T.U.L.F.சார்பில் சமர்ப்பித்த அறிக்கை – 1973
 • சுன்னாகம் வரதராஜபண்டிதர், சிவராத்திரிபுராணம், வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச.வயித்திலிங்கபிள்ளையின் உரை 1881.
 • திருக்குறள் அதிகாரச் சாரமாகிய நன்நெறித்தாலாட்டு, யாழ்ப்பாணம் வல்லை வ.ஞா.கணேசபண்டிதர் 1919
 • கந்தபுராணம் தெய்வயானையம்மை திருமணப்படலம். இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச.வயித்தியலிங்கபிள்ளை அவர்களின் உரையுடன், 1956 இரண்டாம் பதிப்பு
 • கந்தபுராணம் வள்ளியம்மை திருமணப்படலம், இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச.வயித்தியலிங்கபிள்ளை அவர்களின் உரையுடன், 1955 இரண்டாம் பதிப்பு.
 • மறைசை அந்தாதி- நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் - 1913
 • மாரியம்மன் மான்மியம் - பண்டிதர். ஆ. சபாபதி, மட்டக்களப்பு - 1912
 • கல்வளையந்தாதி மூலமும் உரையும் - நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் - 1913
 • திருமுருகாற்றுப்படை - ஆறுமுகநாவலர் உரை - 1853

வெளி இணைப்புகள்[தொகு]