வலைவாசல்:விளையாட்டுக்கள்/முகவுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
A collection of balls used in various sports

விளையாட்டுக்கள் (Game) என்பவை பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட செயற்பாடுகள் ஆகும். விளையாட்டு சில சமயங்களில் வேலை, என்பதுடன் தொடர்புடையது போல் காணப்படுகிறது. ஆனால், வேலை ஊதியத்துக்காகச் செய்யப்படுவது. விளையாட்டு ஒரு கலை என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால் கலையைப்போல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாக விளையாட்டு இருப்பதில்லை. இருந்தாலும், எப்போதும் இவற்றுக்கு இடையேயான எல்லைகள் தெளிவாக இருப்பதில்லை. தொழில் முறை விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு வருமானத்துக்கான ஒரு தொழிலாகவே உள்ளது. "ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. கூடி விளையாடு பாப்பா" என்பது பாரதியின் கூற்று. விளையாட்டு அனைத்து மனிதர்களும் இயல்பாக விரும்பி ஈடுபடும் செயற்பாடுகளில் ஒன்று.