வலைவாசல்:விலங்குரிமை/அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விலங்குரிமை என்பது அனைத்து வலியுணர் விலங்குகளும் மனிதப் பயன்பாட்டுக்கு உட்படாமலிருக்கும் தார்மீக சுயமதிப்பையும் சுதந்திரத்தையும் கொண்டவை என்றும் துன்பத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டிய அடிப்படை உரிமையைக் கொண்டவை என்றும் மனிதர்களுக்கிணையாக வாழ்வின் அடிப்படை நலத்தேவைகளைப் பெறும் உரிமையைக் கொண்டவை என்றும் கூறும் மெய்யியல் ஆகும். பொதுவாகக் கூறின், உலகவழக்கில் "விலங்குரிமை" என்னும் சொல் "விலங்கினப் பாதுகாப்பு" என்றும் "விலங்கின விடுதலை" என்றும் கொள்ளப்படுகிறது. சுறுங்கக் கூறின், தனிமனிதனுக்குத் தரப்படும் வாழத் தேவையான அடிப்படை உரிமைகளும் பாதுகாப்பும் – அஃதாவது எக்காரணத்தைக் கொண்டும் விலக்கில்லாத வாழுரிமை, சுதந்திரம், வலியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை முதலியன – அனைத்து உணர்வுள்ள விலங்குகளுக்கும் நல்கப்பட வேண்டும் என்பதாகும்.

விலங்குரிமை பற்றி மேலும் அறிய...