உள்ளடக்கத்துக்குச் செல்

வலைக்கு அப்பால் வாழ்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலைக்கு அப்பால் வாழ்தல் என்பது மின்சாரம், தொலைத்தொடர்பு, குழாய் நீர், கழிவு அகற்றல் ஒருங்கியம் போன்ற பொது வலைக் கட்டமைப்புகளில் தங்கி வாழாமல், தன்னிறைவாக வாழும் ஏற்பாட்டைக் குறிக்கிறது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பலர் இயல்பாக இந்த வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கின்றனர். அதாவது கிணற்றில் நீர் பெற்று, தோட்டத்தில் உணவு பெற்று, கழிவை எரித்து அல்லது பசளையாக்கி வாழும் சிற்றூர் வாழ்க்கை ஓரளவு தன்னிறைவு கொண்டது. மேற்குநாடுகளில் நகரங்களுக்கு அப்பால், கிட்டத்தட்ட நல்ல வாழ்க்கைத் தரத்தில், தன்னிறைவாக வாழ்தலை Off-the-grid அல்லது வலைக்கு அப்பால் என்ற சொற்தொடர் சுட்டுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் பல பரிசோதனைச் சமூகங்கள் இந்த வாழ்க்கை முறையைக் மேற்கொள்கின்றன.

உணவு

[தொகு]

தோட்டத்தில், அல்லது வயலில் தாமே உணவை உற்பத்தி செய்வது.

ஆற்றல்

[தொகு]

சூரியகலங்கள், காற்றாடிகள், புவி ஆற்றல் போன்ற வழிகளில் ஆற்றலைப் பெறுதல்.

நீர்

[தொகு]

கிணறு, ஆறு போன்றவற்றை நீர்த் தேவைக்காகப் பயன்படுத்தல்.

கழிவு

[தொகு]

கழிவுகளை பசளையாக்கல், மீள்பயன்படுத்தல்.

போக்குவரத்து

[தொகு]

மனித, விலங்கு வலு வாகனங்கள், அல்லது சூரியகல வாகனங்களைப் பயன்படுத்தல்.

வீடு

[தொகு]

தானே வீட்டை, பெரும்பாலும் இயற்கைச் கட்டமைகளுக்குள், இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைக்கு_அப்பால்_வாழ்தல்&oldid=2226982" இலிருந்து மீள்விக்கப்பட்டது