வலுஊட்டும் திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலுஊட்டும் திரை (Intensifying screen) என்பது கதிரியல் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய துணைக் கருவியாகும்.எக்சு கதிர்களைக் கொண்டு நேரடியாகப் கதிர் படம் எடுக்கும் போது ,அவைகளின் அதிக ஊடுருவற்திறனால் கதிர் படம் பெறப் பயன் படாமல் ஊடுருவிச் செல்லுகின்றன.எனவே படத்தினைப் பெற அதிக கதிர்வீச்சனை பாய்ச்சவேண்டிய நிலை உருவாகிறது.இதன் காரணமாக நோயாளி தேவையற்ற கதிர் ஏற்பளவினை பெறநேருகிறது.இவ்வளவு சிறிதேயாயினும் உடல்நலக் கேட்டினை தோற்று வக்கக்கூடும். இதனைத் தவிற்க வலுஊட்டும் திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

வலுஊட்டும் திரைகளில் சிங் சல்பேட்,கேட்மியம் சிங் சல்பேட் போன்ற உடனொளிர் பண்புடைய பொருட்கள் மிகவும் சீராக பொடியாகப் பெறப்படுகிறது.பின் இது ஒட்டும் தன்மையுடைய பொருளுடன் சேர்த்து நல்ல பசையாகப் பெறப்படுகிறது.இப்பசை ஒரு சீரான ஓர் அட்டையில் ஒரே கனஅளவில் பூசப்படுகிறது.இதன்மேல் ஒளிகடத்தும் பண்புடையதும் பாதுகாப்பினைக் கொடுக்க வல்லதுமான ஒரு பூச்சு(Protective coat or T coat ) உள்ளது.இதுவே வலுஊட்டும் திரை எனப்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் எக்சு கதிர்கள் இத்திரைகளால் ஏற்கப்பட்டு அதிக ஒளியினை உமிழ்கிறது.இக்கதிர்களே கதிர்படம் தோன்றகக் காரணமாகும்.இந்நிலையில் குறைந்த எக்சு கதிர்களே கதிர் படத்தினைப் பெற போதுமானது எனவேதான் இது வலுஊட்டும் திரை எனப்படுகிறது.

பி ஏ ஆர் சி குறிப்புகள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலுஊட்டும்_திரை&oldid=3602510" இலிருந்து மீள்விக்கப்பட்டது