வலம்புரி (நாளிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலம்புரி
Valampuriilogo.jpg
வலம்புரி நாளிதழின் சின்னம்
வகைசெய்தித்தாள்
வடிவம்நாளிதழ்
உரிமையாளர்(கள்)வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனம்
ஆசிரியர்நா. விசயசுந்தரம்
நிறுவியது1999 (1999)
மொழிதமிழ்
தலைமையகம்இல. 3, 2ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்பாணம்.
விற்பனைநாடோறும்
இணையத்தளம்www.valampurii.lk

வலம்புரி (ஆங்கிலம்: Valampurii) யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ்களில் ஒன்றாகும். இது இலங்கையில் ஒரு செய்திப் பத்திரிகையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]

அம்சங்கள்[தொகு]

வலம்புரி பத்திரிகையில் தலையங்கச் செய்தி, ஆசிரியர் தலையங்கம், சிறப்புச் செய்திகள், யாழ்ப்பாணச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், வணிகச் செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், விவாத அரங்கு, சங்குநாதம், மரண அறிவித்தல்கள், சிறு விளம்பரங்கள், நிழல் படங்கள் ஆகிய அம்சங்கள் வெளியாகின்றன.

வரலாறு[தொகு]

வலம்புரி பத்தி்ரிகையானது 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்பத்திரிகை வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலம்புரி_(நாளிதழ்)&oldid=1572431" இருந்து மீள்விக்கப்பட்டது