வர்க்கமூல நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வர்க்கமூல நாள் (Square Root Day) என்பது குறிப்பிட்ட நாளொன்றின் நாள் மற்றும் மாதங்களைக் குறிக்கும் எண்கள் இரண்டும் அந்நாளுக்குரிய ஆண்டினைக் குறிக்கும் நான்கு இலக்க எண்களில் வலதோர இரு இலக்க என்ணின் வர்க்கமூலமாக உள்ள நாளைக் குறிக்கும்.[1]

எடுத்துக்காட்டு: 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாளானது 4/4/16 எனக் குறிக்கப்படுகிறது. இதில் நாள் மற்றும் மாதத்தைக் காட்டும் 4 என்ற எண்ணானது ஆண்டைக் காட்டும் ”16” இன் வர்க்கமூலமாக உள்ளது. மற்றொரு எடுத்துக்காட்டு மே 5, 2025 (5/5/25) ஆகும். இருபத்தியோராம் நூற்றாண்டின் இறுதி வர்க்கமூல நாள் செப்டம்பர் 9, 2081 ஆக இருக்கும்.

ஒரு நூற்றாண்டின் வர்க்கமூல நாட்கள்[தொகு]

ஒவ்வொரு நூற்றாண்டிலும் மொத்தம் 9 வர்க்கமூல நாட்களே ஏற்படும். எல்லா நூற்றாண்டுகளிலும் அதே ஒன்பது நாட்களே வர்க்கமூல நாட்களாக இருக்கும். அவை:

 • 1.1.01
 • 2.2.04
 • 3.3.09
 • 4.4.16
 • 5.5.25
 • 6.6.36
 • 7.7.49
 • 8.8.64
 • 9.9.81

அடுத்தடுத்த வர்க்கமூல நாட்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளின் எண்ணிக்கை தொடர் ஒற்றையெண்களாக அமைவைதைக் காணலாம்:

3, 5, 7, 9, 11, 13, 15, 17.

ஒவ்வொரு ஒற்றையெண்ணும் அடுத்தடுத்துள்ள இரு வர்க்க எண்களின் வித்தியாசமாக இருக்குமென்ற பண்பை இது காட்டுகிறது.

அறிமுகம்[தொகு]

கணிதத்தின் இந்தப் பண்பை அறிமுகப்படுத்தியவர் ரோன் கார்டன் என்ற கலிஃபோர்னிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியராவார்.[2] அமெரிக்கப் பள்ளிகளில் இந்த ஒன்பது நாட்களும் அறிவிக்கப்படாத விடுமுறை நாட்கள் ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

 1. Wong, Nicole C. (2004-02-02). "A day getting to the root". The Mercury News. Archived from the original on 2004-08-18. https://web.archive.org/web/20040818204722/http://www.mercurynews.com/mld/mercurynews/news/7854616.htm. பார்த்த நாள்: 2007-02-20. 
 2. Hill, Angela (2009-03-02). "Have a rootin' tootin' Square Root Day". Oakland Tribune. http://www.insidebayarea.com/oaklandtribune/localnews/ci_11821782?source=rss. பார்த்த நாள்: 2009-03-02. 
 3. தினமலர்(09.07.2017). "வர்க்கமூல தேதிகள்". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 6 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்க்கமூல_நாள்&oldid=2349683" இருந்து மீள்விக்கப்பட்டது