வரலாற்றுப் புவியியல் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரலாற்றுப் புவியியல் கோட்பாடு என்பது நாட்டுப்புற இயல் கோட்பாடுகளுள் ஒன்றாகும்.கதைகளின் தோற்றம் அவை பரவிய விதம் அதற்குரிய காரணங்கள் ஆகியவற்றை அறிய இக்கோட்பாடு உதவுகின்றது. இதனைக் கோட்பாடு என்பதற்குப் பதில் முறை என்றே குறிப்பிடலாம்.இக்கோட்பாட்டின்படி ஒரு கதை நூற்றுக்கணக்கான மாற்று வடிவங்களில் காணப்படலாம்.அவையனைத்தும் ஒரு காலத்தில் ஒருவனால் கூறிய கதையினின்றும் கிடைத்திருக்கலாம்.அவை தோன்றிய இடத்திலிருந்து பல்வேறு இடங்களுக்குச் சென்றாமையால் மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கலாம்.சில கதைகளும் கதைப்பாடல்களும் மொழி எல்லை பண்பாட்டு எல்லையைத் தாண்டிப்பரவி உள்ளதை அறிய முடிகிறது.