வரன்தா மலைக்கணவாய்
Appearance
வரன்தா மலைக்கணவாய் (वरंधा घाट) மகராட்டிர மாநிலதின் தேசிய நெடுஞ்சாலை-4 மற்றும் கொன்கனுக்கிடையேயான ஒரு மலைக்கணவாயாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் முகட்டில் அமைந்துள்ள வரன்தா மலைக்கணவாய், அதன் சூழல், அழகிய அருவிகள், குளங்கள் மற்றும் அடர்ந்த காடுகளுக்கு பெயர்பெற்றது. [1]
புவியியல்
[தொகு]வரன்தா மலைக்கணவாய், சாகாயத்தி ரி மலைத்தொடரினுடாகச் சென்று போரிலிருந்து மகாது செல்லும் வழியில் இணைகிறது. கொன்கனிலிருந்து பூனேவிற்கு செல்லும் வழிகளில் இதுவும் ஒன்று. இது பூனேவிலிருந்து, 108கிமீ தொலைவில் உள்ளது. நிராதேவ் அணையிலிருந்து கணவாய்க்கு வரும் வழியில் பல ஊசிகொண்டை வளைவுகள் உள்ளன. மேலும், இப்பாதை அணையின் காயல் நீரினை சற்றி வருவதாக அமைந்துள்ளது.
இப்பாதையிலிருந்து 15கிமீ தொலைவில் சிவதார்கல் என்ற இடம் ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும்.