வனத்து சின்னப்பர் குருசடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புனித வனத்து சின்னப்பர்

வனத்து சின்னப்பர் குருசடி என்பது திண்டுக்கல் மாவட்டத்தில் அடியனூத்து ஊராட்சி, யாகப்பன்பட்டிக்கு அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஆகும். இது திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டா் தொலைவில் உள்ளது. இது 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம் ஆகும்.

இவ் வாலயத்தைச் சுற்றி ஏழு ஆலமரங்கள் உள்ளன. இந்த ஆலமரங்களுக்கு விழுதுகள் கிடையாது. இம் மரங்களும் 100 ஆண்டுகளைக் கடந்து இன்றும் கம்பீரமாக நிழல் பரப்பிக் கொண்டிருக்கிறன.

இவ்வாலயம் திண்டுக்கல் கிறிஸ்தவ மறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. திண்டுக்கல் கிருஸ்தவ மக்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை தவக்காலத்தின் போது இவ்வாலயத்திற்குப் பாதையாத்திரையாகச் சென்று தியானம் மேற்கொள்வாா்கள். இங்கு மக்கள் அதிகம் வருவதால் இவ்வாலயத்திற்கு அருகே புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு ஒரு இலவச முதியோா் இல்லமானது கிறிஸ்தவ மறை மாவட்டதினரால் நடத்தப்படுகிறது.