உள்ளடக்கத்துக்குச் செல்

வண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண்டன் சங்ககாலத்தில் வாழ்ந்த பெரும் பணக்காரன். இவனது செல்வத்தைப் பாதுகாக்கக் கடவுள் அஞ்சி என்னும் அரசன் இவனுக்குத் தூங்கெயில் கதவம் அமைந்த கோட்டை ஒன்றைக் கட்டித் தந்திருந்தான்.

களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம். - காப்பியாற்றுக் காப்பியனார் - பதிற்றுப்பத்து 31

இந்தக் கோட்டை அகப்பா நகரில் இருந்தது. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் அரசனின் சித்தப்பா பல்யானைச் செல்கெழு குட்டுவன். இந்தக் குட்டுவன் அகப்பாக் கோட்டையை வென்று முன்பே தனதாக்கிக் கொண்டிருந்தான். பின்னர் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் தூங்கெயிலை அழித்தான்.

அடிப்படைச் சான்று[தொகு]

கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்
வெண்டிரை முந்நீர் வளைஇய உலகத்து
வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
வண்டன்

- காப்பியாற்றுக் காப்பியனார் - பதிற்றுப்பத்து 31

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டன்&oldid=797787" இலிருந்து மீள்விக்கப்பட்டது