வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம்
North-Eastern Space Applications Centre
குறிக்கோளுரைமனித சேவையில் விண்வெளி தொழில்நுட்பம்.
தலைமையகம்உமியம், மேகாலயா, இந்தியா
இருப்பிடம்இந்தியா

வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் (North-Eastern Space Applications Centre) 2000 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட்ட ஒரு பிராந்திய விண்வெளி மையமாகும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வெளிப்படும் இயற்கை கனிமங்களைக் கண்டறிவதற்குப் பயன்படும் தொலையுணர்தல் தொழில்நுட்பத்தைப் விரைவுபடுத்துவதற்காக விண்வெளித் துறை, இந்திய அரசு மற்றும் வடகிழக்கு மண்டலக் குழு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இவ்விண்வெளி மையம் நிறுவப்பட்டது. விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவித்தல் இம்மையம் நிறுவப்பட்டதற்கான நோக்கமாகும்..[1]

வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் வட்டு இயக்க முறைமை மற்றும் நிப்பான் மின்சார நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மேகாலயாவில் உள்ள சில்லாங்கில் நிறுவப்பட்டது. இந்த மையம் மாநில அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[2]

குறிக்கோள்கள்[தொகு]

வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையத்தின் நோக்கம் தொலைநிலை உணர்திறன் மூலம் பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளங்களைத் தேடிப் பயன்படுத்துதல், வடகிழக்கு மாநிலங்களுக்கு செயற்கைக்கோள் சேவைகளை வழங்குதல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் இணைந்து விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியை மேம்படுத்துதல். போன்றவைகளாகும்.[3][4]

நிகழ்ச்சிகள்[தொகு]

வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் தற்போது தொலையுணர்தல் மற்றும் புவியியல் தகவல் அமைப்புகள், செயற்கைக்கோள் தொடர்பு திட்டம் மற்றும் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி திட்டங்களில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது.

வசதிகள்[தொகு]

வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையத்தில் நவீன தொலையுணர்தல் கருவிகள் மற்றும் மென்பொருள்களைக் கொண்டுள்ளது..

  • A0 அளவு வண்ண வருடிகள்
  • உயர்தர அச்சுப்பொறிகள் மற்றும் வரைபடங்கள்
  • காட்சி விளக்க வசதிகள்

திட்டங்கள்[தொகு]

1:50,000 அளவில் வடகிழக்கு மாநிலங்களின் நில வரைபடம் மற்றும் தரிசு நிலம் மற்றும் ஈரநில கண்காணிப்பு போன்ற திட்டங்களை மேற்கொண்டுள்ளது. வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு வெள்ள முன் எச்சரிக்கை அமைப்பை உருவாக்கியது.[5] மேகாலயா மாநிலம் பற்றிய தகவல்களை வழங்க, தொடு உள்ளீடு அடிப்படையிலான தகவல் அமைப்பையும் உருவாக்கியது.[6][7]

நிதி[தொகு]

மையத்திற்கான நிதி 50:50 விகிதத்தில் இந்திய அரசுக்கும் வடகிழக்கு மண்டலக் குழுவுக்குமாக பிரிக்கப்பட்டுள்ளது. 2012-13 நிதியாண்டில் மத்திய அரசு மையத்திற்கு 8 கோடி ரூபாய்.ஒதுக்கியது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "North East Space Applications Centre". SP News Agency. 2012-12-20. http://spnewsagency.com/north-east-space-applications-centre/. பார்த்த நாள்: 2013-02-14. 
  2. "Meghalaya Government Declares North Eastern Space Application Centre Permanent Complex, Umiam As 'Protected Area'". US Fed News Service(subscription required). Archived from the original on 2016-03-01. பார்க்கப்பட்ட நாள் 2013-02-05.
  3. "Establishment of North Eastern Space Application Centre (NE-SAC)". North-Eastern Council. Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2017-10-17.
  4. "Ushering In Ne Development Through Space Technology". Hindustan Times(subscription required). Archived from the original on 2016-04-09. பார்க்கப்பட்ட நாள் 2013-02-05.
  5. "North Eastern-Space Applications Centre (NE-SAC)". isro.org. Archived from the original on 21 January 2012. பார்க்கப்பட்ட நாள் 2017-10-17.
  6. "DoNER Minister launches Space Based Information Kiosk on North Eastern Region, India". Kangla Online. http://kanglaonline.com/2012/06/doner-minister-launches-space-based-information-kiosk-north-eastern-region-india/. பார்த்த நாள்: 2013-02-05. 
  7. "Mizoram Remote Sensing Application Centre oganises workshop on SIS-DP". mizonews.net. http://www.mizonews.net/mizoramnews/mizoram-remote-sensing-application-centre-oganises-workshop-on-sis-dp/. பார்த்த நாள்: 2013-02-05. 
  8. "North East Space Applications Centre". Press Information Bureau. 2012-12-06. பார்க்கப்பட்ட நாள் 2013-02-14.

புற இணைப்புகள்[தொகு]