வடகிழக்கு திருவிழா, தில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடகிழக்கு திருவிழா, தில்லி (North East Festival, Delhi) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை வெளிப்படுத்தும் திருவிழா ஆகும். இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தில்லியில் நடத்தப்படுகிறது.[1] பிரபல தொழில்முனைவோர், சமூக செல்வாக்கு செலுத்துபவர் மற்றும் உள்கட்டமைப்பு திட்ட வல்லுநர் ஷியாம்கானு மஹந்தா தலைமையிலான ட்ரெண்ட் எம்எம்எஸ் சமூக-கலாச்சார அறக்கட்டளையால் இந்த விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த விழாவில், இந்தியாவின் சிறந்த கலாச்சார வளங்களை வெளிப்படுத்தப்படுகிறது. வடகிழக்கு திருவிழா தில்லியில் சிறந்த இசை விழாவினை நடத்தி திறமையானவர்களை ஊக்குவிக்கின்றது. வடகிழக்கு திருவிழா, வடகிழக்கு இந்தியாவின் சிறந்த ஆடைகளைக் காட்சிப்படுத்தி புதிய மற்றும் சிறந்த வடிவமைப்பாளர்கள், நெசவாளர்கள் மற்றும் பிராந்தியத்தின் சிறந்த மாதிரிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த நாகரீக ஆடை அணிவகுப்பு காட்சிகளையும் ஏற்பாடு செய்து வருகிறது.

வடகிழக்கு இந்தியாவின் உள்ளூர் மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய உணவுகள் திருவிழாவின் போது பல்வேறு பிரபலமான உணவகங்களால் தயாரிக்கப்பட்டுப் பரிமாறப்படும். இந்தப்பட்டியல் கலை, புகைப்படக் கண்காட்சி என நீண்டுகொண்டு செல்லும்.

10வது திருவிழா[தொகு]

தொடர்ச்சியாக 2013 முதல் 7 ஆண்டுகள் தில்லியில் நடைபெற்ற வடகிழக்கு திருவிழா, 2 ஆண்டுகளாக குவகாத்தியில் நடைபெற்றது. தற்பொழுது இதன் 10வது திருவிழா 2022 திசம்பர் 23 முதல் 26 வரை புது தில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கின் வாயில் எண். 14-ல் நடைபெற்றது. இந்த திருவிழா உணவு பிரியர்களுக்கு சொர்க்கமாக இருந்தது. நாட்டில் கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்காக பல்வேறு வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தில்லி உணவு வகைகளின் 50 நிலையங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "North East Festival back with 10th edition in Delhi". Outlook (India). பார்க்கப்பட்ட நாள் 2019-10-02.
  2. https://economictimes.indiatimes.com/news/new-updates/the-north-east-festival-is-back-in-the-streets-of-delhi-after-2-years/articleshow/96446905.cms