உள்ளடக்கத்துக்குச் செல்

வசுந்தரா தொரைசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசுந்தரா தொரைசாமி
பிறப்பு1949

வசுந்தரா தொரைசாமி (Vasundhara Doraswamy, பிறப்பு 1949) என்பவர் கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள வசுந்தரா நிகழ்த்து கலை மையத்தின் நிறுவனர் / இயக்குனர் ஆவார். இவர் ஒரு திறமையான பாரதநாட்டிய நடனக் கலைஞர், நடன இயக்குநர் மற்றும் மரியாதைக்குரிய குரு ஆவார். அவர் கடந்த ஆறு தசாப்தங்களாக மிக உயர்ந்த நிலையில் கலை வடிவத்திற்கு பங்களிப்பு செய்துள்ளார். இவர் மறைந்த ஸ்ரீ பட்டாபி ஜோயிசின் [1] முன்னோடி சீடர்களில் ஒருவர்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

வசுந்தரா தெற்கு கனராவின் (கர்நாடகம்) மூடுபித்ரியில் பிறந்தார்   இவரது பெற்றோர் பி. நாகராஜ் மற்றும் திருமதி. வரதா தேவி ஆவர். முரளிதரராவின் வழிகாட்டுதலின்படி இவருக்கு 4 வயதில் பாரதநாட்டியம் அறிமுகமானது. [2] மேலும் மாநில அளவிலான போட்டியில் தன் 5 வயதில் தங்கப்பதக்கம் வென்றார். இது இவரது திறனை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதன் பிறகு பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர் மறைந்த ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளையின் மேற்பார்வையில் பயிற்சியளிக்க இவரது பெற்றோரைத் தூண்டியது. வசுந்தரா, தனது அர்ப்பணிப்பினாலும், பயிற்சியினாலும் கர்நாடக இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட வித்வத் தேர்வில் முதலாவது இடத்தைப் பெற்று தொடர்ச்சியாக மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றார். [3] இவர் மறைந்த எச். எஸ். தொரைசாமியை மணந்தார். [1] ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இவரது மகனுடன் மருமகள் மேகாலா ஹிராசவே தனது பாரம்பரிய பணியைத் தொடர்கிறார். மேகாலா ஹிராசாவே ஆர்ட் ஆஃப் வின்யாசா என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான பள்ளியைக் கொண்டுள்ளார். அங்கு அவர் மாணவர்களுக்கு மிகுந்த ஆர்வத்துடனும், கலை வடிவத்தில் நடனம் கற்பிக்கிறார்.

தொழில்

[தொகு]

வசுந்தரா 1988 ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வு செய்து பட்டம் பெற்றார். [4] இந்த ஆய்வில் யோகாவிற்கும் பரதநாட்டியத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.   இவர் நாட்டுப்புறவியலில் முதுகலை பட்டம் பெற்றவர் மற்றும் 'டாங்-டா' மற்றும் ' களரிப்பயிற்று ' [5] ஆகிய தற்காப்புக் கலைகளின் முழுமையான பயிற்சி பெற்றவராக உள்ளார். [6] முனைவர் வசுந்தரா யோகாவுக்கும், நடனத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து "நாட்டிய யோகா தரிசனம்" என்ற பெயரில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். [7]

இவரது நடனக் அமைப்பு செய்த, `பாஞ்சலி` நடனமானது யக்சகானம் இசையை ( கர்நாடகத்தின் ஒரு நாட்டுப்புற இசை வடிவம் ) பரதநாட்டியத்திற்கு மாற்றியமைத்ததற்காக குறிப்பிடப்பட்டுள்ளது. [6] கங்கா லஹரி, அம்பே, தாட்சாயணி, பாஞ்சாலி, [8] சகுந்த குஞ்சனா (உதயவர மாதவ ஆச்சார்யாவின் தலைசிறந்த இலக்கிய படைப்புகள்) மற்றும் இப்போது ஜோதி சங்கரின் சேத்ரா தௌரபதி போன்ற தனி ஆடல்கள் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. [9]

டாக்டர் வசுந்தராவுக்கு கர்நாடக மாநில அரசால் நடனத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த மாநில விருதான "நாட்டிய ராணி சாந்தலா" விருது வழங்கப்பட்டது.[10] மேலும் கர்நாடக மாநிலத்தின் விருதான ராஜ்யோத்சவா விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. "கர்நாடக கலா திலக்" மிக இளம் வயதில் பெற்றவர் இவராவார்.[1] மேலும் கர்நாடக சங்க நிருத்யா அகாதமியின் மதிப்புமிக்க விருது மற்றும் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடத்திலிருந்து "ஆஸ்தானா நிருத்ய ரத்னா" பெற்ற ஒரே நபர் இவராவார். தூர்தர்ஷன் இந்தியாவால் இவருக்கு "சந்தனா விருது" வழங்கப்பட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Nathan, Archana. "The sacred framework". The Hindu. The Hindu. http://www.thehindu.com/features/friday-review/the-sacred-framework/article8077516.ece. பார்த்த நாள்: 21 August 2016. 
  2. Kamath, Ganesh. "Moodbidri's grand old building that served as court slinking into oblivion". daijiworld.com. daijiworld. Archived from the original on 21 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Cavale, Sangeetha. "Yoga and the energy of dance". Times. Times of India. பார்க்கப்பட்ட நாள் 2 April 2002.
  4. Malini, Nair. "Fit to dance". The Crest Edition. Times of India. Archived from the original on 8 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 September 2012.
  5. Kumar, Sujit Chandra. "When the body becomes all eyes". Deccan Chronicle. DC. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. 6.0 6.1 "Tapping yoga for creativity". The Hindu. The Hindu Newspaper. பார்க்கப்பட்ட நாள் 30 December 2010.
  7. "An Invaluable treasure for Classical Dance". Big News Live. Big News Live. Archived from the original on 16 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 21 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. Probal, Gupta. "Aesthetic innovation within the traditional boundary". Nartaki. பார்க்கப்பட்ட நாள் 17 March 2010.
  9. "Kshatra Draupadi - leaves audiences in awe". City Today. Archived from the original on 25 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 5 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Kannada Being Suppressed: URA". The New Indian Express. Indian Express. 24 May 2014. http://www.newindianexpress.com/cities/bengaluru/Kannada-Being-Suppressed-URA/2014/05/24/article2242461.ece. பார்த்த நாள்: 24 May 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுந்தரா_தொரைசாமி&oldid=3606790" இலிருந்து மீள்விக்கப்பட்டது