உள்ளடக்கத்துக்குச் செல்

வசந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான் (Vasantrao Balwantrao Chavan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 13 ஆவது மகாராட்டிர சட்டப் பேரவையில் இவர் உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் நைகான் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] முன்னதாக வசந்த்ராவ் நைகானில் சுயேட்ச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2] செப்டம்பர் 2014 ஆம் ஆண்டில் இந்திய காங்கிரசுக் கட்சியில் இணைந்தார். 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் சட்டப் பேரவையின் பொதுக் கணக்குக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[3] நைகானில் உள்ள ஜந்தா உயர்நிலைப்பள்ளி மற்றும் வேளாண்மைக் கல்லூரியின் தலைவராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]