வங்காளதேச தேசியக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேச தேசியக் கட்சி - BNP
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি
தலைவர்பேகம் கலீடா சியா
செயலாளர் நாயகம்பிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கிர்
நிறுவனர்சியாவுர் ரகுமான்
மூத்த துணைத் தலைவர்தாரிக் ரகுமான்
தொடக்கம்1 செப்டெம்பர் 1978
தலைமையகம்28/1 நாயா பல்ட்டான், டாக்கா.
மாணவர் அமைப்புவங்காளதேச ஜாதியோதபடி சத்ரா தள்
கொள்கைவங்காளதேச தேசியம்
சுதந்திரமான பொருளாதாரம்
சமூகப் பழைமைவாதம்

அரசியல் நிலைப்பாடுநடு-வலது
நிறங்கள்பச்சை
ஜாதியோ சங்சத்தில் இடம்
0 / 350
தேர்தல் சின்னம்
Dhaner Shish, BNP party symbol
இணையதளம்
www.bnpbd.org

சுருக்கமாக பி.என்.பி (BNP) என அறியப்படும் வங்காளதேச தேசியக் கட்சி தற்காலத்தில் வங்காளதேசத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளுள் ஒன்று. 1978 ஆம் ஆண்டின் சனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டின் ஏழாவது சனாதிபதியான சியாவுர் ரகுமானால் 1978 செப்டெம்பர் 1 இல் இக்கட்சி தொடங்கப்பட்டது. நாட்டின் தேசியக் கருத்துக் கொண்ட மக்களை ஒன்றிணைப்பதே இதன் நோக்கம். கட்சி உருவான பின்னர், அது இரண்டாம், ஐந்தாம், ஆறாம், எட்டாம் தேசியத் தேர்தல்களிலும், 1978 இலும், 1981 இலும் இடம்பெற்ற சனாதிபதித் தேர்தல்களிலும் வெற்றி பெற்றது. 1996 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தோல்வியடைந்த போதும், நாட்டின் வரலாற்றில் அதுவரை இல்லாதபடி 116 உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவானது. 2014 இல் இடம்பெற்ற தேசியத் தேர்தலைப் புறக்கணித்ததனால், அதன் பின்னர் உருவான நாடாளுமன்றத்தில் இக்கட்சிக்கு உறுப்பினர்கள் எவரும் இல்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளதேச_தேசியக்_கட்சி&oldid=3644845" இலிருந்து மீள்விக்கப்பட்டது