வங்காளதேசத்தில் உடல்நலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வங்காளதேசத்தில் உடல்நலம் (Health in Bangladesh) ஒப்பீட்டளவில் தாழ்ந்த தரநிலையிலேயே நீடித்து வருகிறது. 2010 ஆம் ஆண்டில் நாட்டின் வறுமை நிலை 31% அளவுக்கு[1]) குறைந்து மேம்பாடு அடைந்த போதிலும் உடல்நலமும் உடல்நலக் கல்வியும் நாட்டில் போதிய முக்கியத்துவத்தைப் பெறவில்லை.

உடல்நலத்திற்கான உள்கட்டமைப்புகள்[தொகு]

வங்காளதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கான மொத்த செலவினம் 2009 ஆம் ஆண்டில் 3.35 சதவீதமாக இருந்தது[2].

10000 நபர்களுக்கு மூன்று படுக்கைகள் என்ற எண்ணிக்கையில் நாட்டில் மருத்துவமனைகள் இருந்தன[3]. வங்காள அரசின் மொத்த 2009 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையில், உடல்நலம் பேணலுக்காக செலவழிக்கப்படும் தொகையானது, மொத்த செலவில் 7.9 சதவீதத் தொகையாகும். குடிமக்கள் தங்கள் வருவாயில் பெரும்பகுதியை உடல்நலம் காப்பதற்காக செலவிட வேண்டிய நிலையில் இருந்தனர் [2].

மருத்துவமனைகள்[தொகு]

2015 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி வங்காளதேசத்தில் உள்ள மருத்துவமனைகளின் மொத்த எண்ணிக்கை 1683 ஆகும். இந்த 1683 மருத்துவமனைகளில் 678 அரசு மருத்துவமனைகள் மற்றும் 1005 மருத்துவமனைகள் அரசு அல்லாத தனியார் மருத்துவமனைகள் ஆகும். [4]

மருத்துவப் பள்ளிகள்[தொகு]

வங்காள தேசத்தில் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவப் பள்ளிகள் என்றே அழைக்கப்படுகின்றன. அலோபதி மற்றும் மாற்று மருத்துவம் தொடர்பான பட்டதாரி நிலை மருத்துவக் கல்வியை மருத்துவக் கல்லூரிகள் வழங்குகின்றன. நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இக்கல்லூரிகள் இயங்குகின்றன. மேலும் இக்கல்லூரிகள் அவை இருக்கும் மண்டலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. வங்காளதேசத்தில் தொடங்கப்பட்ட முதலாவது மருத்துவப் பல்கலைக்கழகம் சேக் முயீப் மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகும். நாட்டின் ஒரேயொரு மருத்துவப் பல்கலைக்கழகமான இங்கு முதுநிலை மருத்துவக் கல்வி வழங்கப்படுகிறது. சிட்டகாங், இராச்சாகி மருத்துவக் கல்லூரிகள் மருத்துவப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது [5][6]

சுகாதார நிலைமை[தொகு]

ஊட்டச்சத்துக் குறை[தொகு]

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் என்ற தரவரிசையில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் வங்காளதேசக் குழந்தைகள் முன்னணியில் நிற்கின்றனர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமலும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 60%, குழந்தைகள் வளர்ச்சி குன்றியும் இருக்கின்றனர்[7]. 1985 ஆம் ஆண்டு நிலவரப்படி 45 சதவீதத்திற்கு மேற்பட்ட கிராமக் குடும்பங்களும் 76 சதவீதத்திற்கு மேற்பட்ட நகரக் குடும்பங்களும் அவர்களுக்குப் போதுமான அளவு சக்திதரும் கலோரி மதிப்பு உட்கொள்ளும் நிலையை விடக் கீழே இருந்தனர்[8]. போதிய ஊட்டச் சத்து இல்லாத தாய்மார்கள், போதிய ஊட்டச் சத்து இல்லாத குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நிலை தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் பிறக்கும்போது சாதாரணமாக இருக்கவேண்டிய எடை அளவைவிட குறைவான எடையுடன் பிறக்கின்றன. இதனால் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிக்கின்றது. இத்தகைய குழந்தைகள் வளரவளர நீரிழிவு நோய், இதயநோய் போன்ற நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது[9]. வங்காளதேசத்தில் ஒவ்வொரு மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்குள் ஒரு குழந்தை இறக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 120000 குழந்தைகள் இறந்து போகின்றனர்[10].

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளில் வங்காளத்தேசக் குழந்தைகள் முதலிடத்தைப் பிடிப்பதாக உலக வங்கியின் மதிப்பீடு தெரிவிக்கிறது[11][10]. வங்காளதேச மக்கள் தொகையில் 26 சதவீத நபர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக உள்ளனர்[12]. 46 சதவீதக் குழந்தைகள் எடைகுறைவால் மிதமானது முதல் கடுமையான பாதிப்புக்கு ஆட்படுகின்றனர்[13]. 43 சதவீத ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர். பள்ளி முன்பருவக் கல்வி வயதுக் குழந்தைகள் உயிர்ச்சத்து ஏ குறைபாடு உள்ளவர்களாகவும் இரத்த சோகை நோயுள்ளவர்களாகவும் உள்ளனர்[14]. பெண்களும் ஊட்டச்சத்துக் குறைபாடால் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து வழங்கப்பட்டால் அவர்களுக்கும் ஆரோக்கியமான அவசியமான சத்துள்ள உணவு கிடைக்க வழியேற்படும்[15]

ஊட்டச்சத்தின்மைக்கான காரணங்கள்[தொகு]

வங்காளதேசத்தின் பெரும்பாலான நிலப்பரப்பு தாழ்வானதாகவும், வெள்ளத்தால் சூழப்பட்டும் காணப்படுகிறது. நாட்டின் அதிகமான மக்கள் தொகை உச்சக்கட்ட வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதனால் இவர்கள் பகுதியில் உள்ள பயிர்கள் அழிவை கொண்டுவரும் தீவிர வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன[16]. ஒவ்வொரு ஆண்டும், 20% முதல் 30% வரை வங்காளதேசம் வெள்ளத்தின் பாதிப்பை சந்திக்கிறது. வெள்ளம், உணவுப் பாதுகாப்பையும் வெள்ளத்தின் விளைவால் விவசாய உற்பத்திக் குறைவும் ஏற்பட்டு [17] உணவு பற்றாக்குறையை உண்டாக்குகிறது[18].

சுகாதாரமற்ற, துப்புரவற்ற சுற்றுப்புறச் சூழலும் சத்துப்பற்றாகுறையை உண்டாக்குகிறது. சுகாதாரமான நீர் வழங்கல் இல்லாததாலும் பற்றாக்குறை நோய்கள், மலேரியா போன்ற, ஒட்டுண்ணி நோய்கள், சிசுடோசோமிய அழற்சி நோய்கள் நேரடியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குடிநீர் பற்றாக்குறையும், தூய்மையற்ற குடிநீரும் மக்களை பெரிதும் பாதிக்கிறது. நிலத்தடி நீர் பெரும்பாலும் உயர் ஆர்சனிக் செறிவு கொண்டதாக உள்ளது [19]என கண்டறியப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் துப்புரவுப் பராமரிப்பு 1995 ஆம் ஆண்டில் மட்டும் வெறும் 35% ஆக மட்டுமே இருந்தது[20].

கிட்டத்தட்ட வங்காளத்து வறிய குடும்பங்களில், மூன்று நபரில் ஒருவர் திறந்தவெளியில் மலங்கழிக்கும் நபராக உள்ளார். 32% கிராமப்புற பகுதிகளில் மட்டுமே சர்வதேச மதிப்பீட்டில் தரம் உடைய சுகாதார கழிப்பிடங்கள் உள்ளன. மக்கள் தினசரி இத்தகைய ஆரோக்கியமற்றச் சூழலை சந்திக்க வேண்டியுள்ளது[21].இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து நோய் கிருமிகளின் செயல்பாடுகள் தீவிரமடையும் சூழல் உருவாகிறது. ஊட்டச்சத்து இழப்பு,[22] பசியின்மை போன்ற நோய்கள் உண்டாகின்றன. வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி மூலமாகவும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் இழப்பு ஏற்படுகிறது[23]

வேலைவாய்ப்பின்மையும், தொழில் சார்ந்த சில பிரச்சினைகளும் கூட இத்தகைய ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு காரணமாகின்றன. 2010 ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாக இருந்தது[24]. மக்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை இல்லாததால் நிலையான வருமானமின்றி குறைந்தபட்ச ஊட்டச்சத்து உணவு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்[25].

ஊட்டச்சத்துக் குறைவின் விளைவுகள்[தொகு]

உடல்நல விளைவுகள்[தொகு]

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஒர் ஆரோக்கியமான இளைஞனாக வளர்வதற்கு வாய்ப்பில்லாமல் போகின்றது. மெலிதல், வளர்ச்சி குன்றுதல், எடை குறைதல், இரத்த சோகையால் பாதிக்கப்படல், மாலைக்கண், அயோடின் குறைபாடு[11] போன்ற உடல்நலக் குறைவு நோய்கள் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளை எளிதாகப் பிடித்துக் கொள்கின்றன. இதன் விளைவாக, வங்காளதேசத்தில் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் 57 ஆவது இடத்தில் வங்காளம் உள்ளது[26]

பொருளாதார விளைவுகள்[தொகு]

வங்கதேச மக்கள் தொகையில் 40% குழந்தைகளாகும்[27]. ஊட்டச்சத்துக் குறைபாடும் அதனால் ஏற்படும் விளைவுகளும் அக்குழந்தைகள் கல்வி கற்பதில் இடர்பாடுகளை உண்டாக்குகின்றன. 50 சதவீத பள்ளிவயதுக் குழந்தைகள் மட்டுமே உயர்நிலைப் பள்ளிகளில் சேர்கின்றனர்[26]. இதனால் செயல்திறம் குறைந்த தொழிலாளர்களாக அவர்கள் உருவாகி பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கின்றனர். வங்காளதேசத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2009 ஆம் ஆண்டில் வெறும் 3% மட்டுமே இருந்தது[26].

எடுக்கப்பட்ட முயற்சிகள்[தொகு]

ஊட்டச்சத்துக் குறைபாடு நோயைப் போக்க பல திட்டங்கள் மற்றும் முயற்சிகள் வங்காளத்தில் மேற்கொள்ளப்பட்டன. வங்கதேச அரசாங்கம், யுனிசெப் நிறுவனம், அனைத்துலக எலன் கெல்லர் அமைப்பு போன்ற தன்னார்வ நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, இளஞ்சிறார் முதல் குழந்தையைச் சுமக்கும் தாயார்[11] வரை அவர்கள் வாழ்க்கைச் சுழற்சி முழுமைக்கும் அவசியமான ஊட்டச்சத்தை இலக்காகக் கொண்டு செயற்பட்டன. இதனால் குறிப்பிடத்தக்க சிலமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மாலைக்கண் நோய் 3.76 சதவீதத்திலிருந்து 0.04% ஆகக் குறைந்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளிடம் காணப்பட்ட அயோடின் குறைபாடு 42.5 சதவீதத்திலிருந்து 33.8% ஆகக் குறைந்துள்ளது[11]

தாய்வழி மற்றும் குழந்தை சுகாதாரம்[தொகு]

எட்டு வங்கதேசப் பெண்களில் ஒருவருக்கு மட்டுமே முறையாகப் பயற்சி பெற்ற தாதிப் பெண்களின் சேவை கிடைத்து வந்தது. கருவுற்ற பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு பேறுகாலத்திற்கு முந்தைய பாதுகாப்பு தேவைப்பட்டது. மகப்பேறு பராமரிப்பில் சமனின்மை கணிசமாகக் குறைந்த காரணத்தால் உடல் நிலை பராமரிப்பு சேவைகள் சற்று மேம்பட்டன[28]. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 2010 ஆம் ஆண்டில் வங்காள தேசத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் 1,00,000 பிரசவங்களுக்கு 340 ஆகக் குறைந்தது [29]

மேற்கோள்கள்[தொகு]

 1. Shah, Jahangir (18 April 2011). (in bn)Prothom Alo. http://www.prothom-alo.com/detail/date/2011-04-18/news/147495. பார்த்த நாள்: 18 April 2011. 
 2. 2.0 2.1 "Global Health Observatory Data Repository". பார்த்த நாள் 14 February 2012.
 3. "Hospital Beds (Per 10,000 Population), 2005-2011". மூல முகவரியிலிருந்து 11 April 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 February 2012.
 4. Edited (2007). Statistical Pocket Book of Bangladesh (1st ). Bangladesh bureau of statistics. 
 5. "Rajshahi Medical College becomes university". http://www.dhakatribune.com/education/2014/apr/20/rajshahi-medical-college-becomes-university. பார்த்த நாள்: 2014-12-02. 
 6. "Ctg and Rajshahi medical colleges to be upgraded". http://bdnews24.com/health/2014/02/27/ctg-and-rajshahi-medical-colleges-to-be-upgraded. பார்த்த நாள்: 2014-12-02. 
 7. "Bangladesh Healthcare Crisis". BBC News. 28 February 2000. http://news.bbc.co.uk/2/hi/south_asia/659674.stm. பார்த்த நாள்: 14 February 2012. 
 8. Heitzman, James; Worden, Robert, தொகுப்பாசிரியர்கள் (1989). "Health". Bangladesh: A Country Study. Washington, D.C.: Federal Research Division, Library of Congress. பக். 90. http://countrystudies.us/bangladesh/48.htm. 
 9. "Fighting Malnutrition in Bangladesh". மூல முகவரியிலிருந்து 1 December 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 February 2012.
 10. 10.0 10.1 "Children and women suffer severe malnutrition". IRIN. 19 November 2008. http://www.irinnews.org/report/81544/bangladesh-children-and-women-suffer-severe-malnutrition. பார்த்த நாள்: 14 February 2012. 
 11. 11.0 11.1 11.2 11.3 "Child and Maternal Nutrition in Bangladesh".
 12. "The state of food insecurity in the food 2011".
 13. "The State of the World's Children 2011".
 14. "High Malnutrition in Bangladesh prevents children from becoming "Tigers"".
 15. Rizvi, Najma (22 March 2013). "Enduring misery". D+C Development and Cooperation (Federal Ministry of Economic Cooperation and Development). http://www.dandc.eu/en/article/bangladesh-does-not-guarantee-food-security-demanded-its-constitution. 
 16. "Rural poverty in Bangladesh". International Fund for Agricultural Development.
 17. "Bangladesh: Priorities for Agriculture and Rural Development". மூல முகவரியிலிருந்து 18 May 2008 அன்று பரணிடப்பட்டது.
 18. "Poverty Profile People's Republic of Bangladesh Executive Summary". Japan Bank for International Cooperation (October 2007).
 19. "Bangladesh's Water Crisis".
 20. "A participatory approach to sanitation: experience of Bangladeshi NGOs".
 21. "Rural Sanitation, Hygiene and Water Supply".
 22. "C. Nutrition and Infectious Disease Control". Supplement to SCN News No. 7 (Mid-1991) (United Nations). http://www.unsystem.org/scn/archives/scnnews07supplement/ch3.htm. 
 23. "Underlying Causes of Malnutrition". The Mother and Child Health and Education Trust.
 24. "Unemployment Problem in Bangladesh".[நம்பகத்தன்மையற்றது?]
 25. "Nutrition Program".
 26. 26.0 26.1 26.2 "Bangladesh – Statistics".
 27. "Bangladesh, Effects of the Financial Crisis on Vulnerable Households".
 28. Rahman, M. H.; Mosley, W. H.; Ahmed, S.; Akhter, H. H. (January 2008). "Does Service Accessibility Reduce Socio-Economic Differentials In Maternity Care Seeking? Evidence From Rural Bangladesh". Journal of Biosocial Science (Cambridge University Press) 40 (1): 19–33. doi:10.1017/S0021932007002258. 
 29. "The State of the World's Midwifery" (2011). பார்த்த நாள் 2 August 2016.

புற இணைப்புகள்[தொகு]