ழான்-குளோடு சுன்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ழான்-குளோடு சுன்கர்
Ioannes Claudius Juncker die 7 Martis 2014.jpg
ஐரோப்பிய ஆணையத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 நவம்பர் 2014
துணை குடியரசுத் தலைவர் பிரான்சு டிம்மெர்மான்சு
முன்னவர் ஒசே மானுவல் பர்ரோசோ
லக்சம்பர்க் பிரதமர்
பதவியில்
20 சனவரி 1995 – 4 திசம்பர் 2013
அரசர் ஜீன்
ஹென்றி
துணை ழாக் பூசு
லைடி போல்பெர்
ஜீன் அசெல்போர்ன்
முன்னவர் ஜாக் சான்டர்
பின்வந்தவர் இக்சேவியர் பெட்டல்
நிதி அமைச்சர்
பதவியில்
14 சூலை 1989 – 23 சூலை 2009
பிரதமர் ஜாக் சான்டர்
முன்னவர் ஜாக் சான்டர்
பின்வந்தவர் லுக் பிரீடன்
தனிநபர் தகவல்
பிறப்பு 9 திசம்பர் 1954 (1954-12-09) (அகவை 68)
ரெடேஞ்சு, லக்சம்பர்க்
அரசியல் கட்சி கிறித்தவ சோசலிச மக்கள் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கிறிஸ்டியான் பிரிசிங்
படித்த கல்வி நிறுவனங்கள் இசுட்ராசுபோர்கு பல்கலைக்கழகம்
சமயம் உரோமைக் கத்தோலிக்கம்
கையொப்பம்

ழான்-குளோடு சுன்கர் (Jean-Claude Juncker, இலுகுசெம்பூர்கிய உச்சரிப்பு: [ʒ̊ɑ̃ːkloːd ˈjʊŋ.kɐ]; பிறப்பு 9 திசம்பர் 1954) லக்சம்பர்க் அரசியல்வாதியும் 12வது ஐரோப்பிய ஆணையத் தலைவரும் ஆவார். சுங்கர் 1995 முதல் 2013 வரை லக்சம்பர்க் பிரதமராகவும் 1989 முதல் 2009 வரை நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். ஐரோக்குழுமத்தின் முதல் நிரந்தர தலைவராக 2005 முதல் 2013 வரை பொறுப்பில் இருந்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றில், நீண்டநாட்கள் அரசுத்தலைவராக விளங்கிய பெருமை இவருக்குண்டு. உலகளவிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களில் நீண்டநாட்கள் பதவியில் இருந்தவர் என்ற சாதனைக்கும் உரியவர்.[1] இவரது பதவிகாலத்தில் ஐரோப்பிய நிதி நெருக்கடி உச்சக்கட்டமாக இருந்தது.

சுங்கர் ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) சார்பாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் இவரது கட்சி 751 இடங்களில் 220 இடங்களில் வென்றது.[2] சூன் 27 இல், ஐரோப்பிய மன்றம் அலுவல்முறையாக சுங்கரை தலைவர் பதவிக்கு நியமித்தது.[3][4] சூலை 15இல் ஐரோப்பிய நாடாளுமன்றம் இவரைத் தேர்ந்தெடுத்தது; வாக்களித்த 729 பேரில் 422 பேரின் வாக்குகளை இவர் பெற்றார்.[5] இவர் நவம்பர் 1,2014 அன்று ஓசே மானுவல் பர்ரோசோவிடமிருந்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.[6]

மேற்சான்றுகள்[தொகு]

  1. McDonald-Gibson, Charlotte (11 சூலை 2013). "Luxembourg PM Jean-Claude Juncker calls snap elections amid secret service scandal – risking longest held office for any EU leader". The Independent. http://www.independent.co.uk/news/world/ஐரோப்பா/luxembourg-pm-jeanclaude-juncker-calls-snap-elections-amid-secret-service-scandal--risking-longest-held-office-for-any-eu-leader-8702604.html. பார்த்த நாள்: 12 ஆகத்து 2013. 
  2. "Results of the 2014 European elections". European Parliament. 28 சூன் 2014. 2014-10-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "EU backs Juncker to head Commission". BBC. 27 சூன் 2014. 27 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "EU leaders give thumbs up to Juncker, Britain isolated". EurActiv. 27 சூன் 2014. 28 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. ஐரோப்பாan Commission (15 சூலை 2014), "A new start for ஐரோப்பா: My agenda for Jobs, Growth, Fairness and Democratic Change", Press release, 15 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது
  6. "MEPs elect Jean-Claude Juncker to head EU Commission", BBC News, 15 சூலை 2014, 15 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=ழான்-குளோடு_சுன்கர்&oldid=3578619" இருந்து மீள்விக்கப்பட்டது