லோரீன் பவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லோரீன் பவல் ஜொப்ஸ்
Laurene Powell Jobs.jpg
பிறப்புலோரீன் பவல்
1963/1964[1]
இருப்பிடம்பாலோ அல்டோ, கலிபோர்னியா
வாழ்க்கைத்
துணை
ஸ்டீவ் ஜொப்ஸ் (1991-இதுவரை)
பிள்ளைகள்3

லோரீன் பவல் ஜொப்ஸ் (Laurene Powell Jobs), கொலேஜ் ட்ரெக் நிறுவனத்தின் துணை நிறுவுனரும், பணிப்பாளர் சபையின் தலைவரும் ஆவார். இவர் ஆப்பிள் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவ் ஜொப்ஸின் மனைவியாவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பவல் ஜொப்ஸ் தனது கலைப் பட்டப் படிப்பை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். அத்தோடு, 1985 ஆம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் பொருளாதாரவியலுக்கான பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.[2] வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமானிப்பட்டத்தை ஸ்டான்பேர்ட் வணிகவியல் பட்டதாரி பள்ளியில் இவர் பெற்றார்.[3]

1991 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 18 ஆம் நாள் ஸ்டீவ் ஜொப்ஸை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1991 ஆம் ஆண்டு செப்டம்பரில் ரீட் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து 1995 மற்றும் 1998 இல் முறையே எரின் மற்றும் ஈவ் என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்தன.[1] பவல் ஜொப்ஸ் தனது கணவர், பிள்ளைகளோடு, பாலோ அல்டோவில் வசித்து வருகின்றார்.[4]

உசாத்துணைகள்[தொகு]

  1. 1.0 1.1 Linzmayer, Owen W. (2004). Apple Confidential 2.0: The Definitive History of the World's Most Colorful Company. No Starch Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1593270100. http://books.google.com/books?id=mXnw5tM8QRwC&pg=PA81. 
  2. "Trustees' Council of Penn Women". University of Pennsylvania. Laurene Powell Jobs, CW'85
  3. "President Obama Announces Members of the White House Council for Community Solutions". Press Release. The White House. December 14, 2010.
  4. "Laurene Powell Jobs — PARSA". PARSA Community Foundation. 2006. 2010-09-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-07-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோரீன்_பவல்&oldid=3227637" இருந்து மீள்விக்கப்பட்டது